ஹிஜ்ரி வருடம் 1435 ஷவ்வால் மாதம் பிறை 15
ஜய வருடம் ஆடி மாதம் 27ம் நாள் செவ்வாய்க்கிழமை
TUESDAY, AUGUST ,12, 2014
வரு. 82  இல. 190
 

துருக்கியின் புதிய ஜனாதிபதியாக பிரதமர் தையிப் எர்டொகன் வெற்றி

துருக்கியின் புதிய ஜனாதிபதியாக பிரதமர் தையிப் எர்டொகன் வெற்றி

துருக்கியில் முதல் முறை மக்கள் வாக் கெடுப்பு மூலம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்த லில் பதவிக்காலம் முடிந்து செல்லவிருக்கும் அந்நாட்டின் பிரதமர் ரிசப் தையிப் எர்டொகன் வெற்றிபெற்றுள்ளார். இது நாட்டின் புதிய யுகம் என்று அவர் வர்ணித்துள்ளார்.

தேர்தல் வெற்றியை அடுத்து தலைநகர் அங் காராவில் இருக்கும் தனது ஆளும் ஏ.கே.பீ. கட்சி தலைமையகத்திற்கு முன்னால்; நின்று ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய எர்டொகன், இது தமக்கு வாக்க ளித்தவர்களுக்கு மட்டுமன்றி அனைத்து துருக்கி மக்களினதும் வெற்றியென்று குறிப்பிட்டார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தேர் தலில் எர்டொகன் 52 வீதமான வாக்குகளை வென்று இரண்டாம் சுற்று தேர்தலை தவிர்த்துக் கொண்டார். துருக்கியில் அதிகாரம் அற்ற சம் பிரதாயமான ஜனாதிபதி முறையில் மாற்றங் களை கொண்டுவர எர்டொகன் எதிர்பார்த்துள் ளார்.

கடந்த 2003 ஆம் ஆண்டிலிருந்து துருக்கி பிரதமராக இருக்கும் எர்டொகன் மற்றுமொரு தவணைக்கு பிரதமர் பதவிக்கு நிற்க அரசியல மைப்பின்படி தடுக்கப்படுகின்றமை குறிப்பிடத் தக்கது.

எதிர்வரும் ஓகஸ்ட் 28 ஆம் திகதி எர் டொகன் ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளார். இந்நிலையில் ஆளும் ஏ.கே.பீ. கட்சிக்கு புதிய தலைவர் மற்றும் பிரதமர் நியமிக்கப்படவேண் டியுள்ளது. எனினும் எர்டொகனின் கட்டுப்பாட் டில் உள்ள ஒருவரே அந்த பதவிக்கு தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் வெற்றிக்கு பின்னர் உரையாற்றிய எர்டொகன், "நான் எனக்கு வாக்களித்தவர் களுக்கு மாத்திரம் ஜனாதிபதியாக இருக்கப் போவதில்லை. 77 மில்லியன் மக்களுக்கும் நான் ஜனாதிபதியாக இருப்பேன்.

எமது தேசம் இன்று மற்றுமொருமுறை வெற்றிபெற்றிருக்கிறது. எமது ஜனநாயகம் இன்று மற்றுமொருமுறை வெற்றிபெற்றிருக்கிறது. எனக்கு வாக்களித்தவர்களை விடவும் வாக்களிக்கா தவர்கள் அதிகம் வெற்றிபெற்றிருக்கிறார்கள். என்னை விரும்புபவர்களை விடவும் வெறுப்பவர் கள் அதிகம் வெற்றிபெற்றிருக்கிறார்கள்" என்று எர்டொகன் குறிப்பிட்டார்.

எர்டொகனின் 11 ஆண்டு ஆட்சியில் துருக்கி பொருளாதார ரீதியில் அதிக வளர்ச்சி கண்ட தோடு அடிக்கடி இராணுவ சதிப்புரட்சி ஏற்படும் நாட்டில் ஜனநாயக செயற்பாடுகள் ஸ்திரம் அடைந்தது.

மதச்சார்பற்ற நாட்டில் இஸ்லாமிய சிந்தனை களை புகுத்த எதேச்சதிகாரத்தை பயன்படுத்து வதாக எர்டொகனை விமர்சிக்கு மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன.

எர்டொகனை எதிர்த்து போட்டியிட்ட இஹ்சா னொக்லு 38 வீத வாக்குகளை பெற்றதோடு குர்திஷ் அரசியல்வாதியான சலஹத்தீன் டிமிர் டஸ் 10 வீத வாக்குகளை பெற்றார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி