ஹிஜ்ரி வருடம் 1435 ஷவ்வால் மாதம் பிறை 15
ஜய வருடம் ஆடி மாதம் 27ம் நாள் செவ்வாய்க்கிழமை
TUESDAY, AUGUST ,12, 2014
வரு. 82  இல. 190
 

காசா முற்றுகையை அகற்றுவதே இறுதி இலக்கென மெ'hல் உறுதி

காசா முற்றுகையை அகற்றுவதே இறுதி இலக்கென மெ'hல் உறுதி

இஸ்ரேலுடனான சமரச முயற்சியின் இறுதி இலக்கு காசா மீதான முற்றுகை முடி வுக்கு வருவதாக இருக்க வேண்டும் என ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் காலித் மெ'hல் உறுதியளித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட புதிய 72 மணிநேர யுத்த நிறுத்தம், வெற்றிகர மான பேச்சுவார்த்தையை உறுதிசெய்யும் தந்திரோபா யமான முயற்சி அல்லது காசாவில் மனிதாபிமான உதவி வழங்கலை எளிதாக்கும் வழி என்று மெ'hல் ஏ.எப்.பி. செய்திச் சேவைக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.

"காசா முற்றுகையை இல்லாமல் செய்வதே எமது இறுதி இலக்கு. நாம் இந்த இலக்கையே வலியுறுத்துகிறோம். இஸ்ரேலின் அலட்சியம் மற்றும் தொடரும் ஆக்கிரமிப்பு நிலைப்பாட்டுக்கு எதிராக ஏனைய பலஸ்தீன தரப்புகளுடன் இணைந்து அரசியல் மற்றும் அனைத்து வகை யிலும்; போராட ஹமாஸ் தயாராக உள்ளது" என்று அவர் வலியுறுத் தினார்.

கட்டாரில் அதிக பாதுகாப்பு கொண்ட தனது வீட்டில் இருந்தே மெ'hல் இந்த பேட்டியை அளித்திருந்தார்.

காசாவை தரை, வான் மற்றும் கடல் வழியால் கடந்த எட்டு ஆண் டுகளாக முற்றுகையில் கைத்திருக்கும் இஸ்ரேலின் நடவடிக்கையை விலக்கிக்கொள்ள வேண்டும் என்பதே பலஸ்தீன தரப்பின் பிரதான கோரிக்கையாகும்.

"இந்த கோரிக்கை செயற்கையானதல்ல. இது பட்டிணி மற்றும் பயணத் தடைகள் இன்றி வாழ விரும்பும் பலஸ்தீனர்களின் உரிமையாகும்" என்று மெ'hல் குறிப்பிட்டார்.

எனினும் இந்த முற்றுகையை முடிவுக்கு கொண்டுவர தமது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று இஸ்ரேல் நிபந்தனை விதித்துள்ளது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி