ஹிஜ்ரி வருடம் 1435 ரஜப் மாதம் பிறை 27
ஜய வருடம் வைகாசி மாதம் 13ம் நாள் செவ்வாய்க்கிழமை
TUESDAY, MAY ,27, 2014
வரு. 82  இல. 124
 

இலங்கை அணிக்கு அபார வெற்றி

இலங்கை அணிக்கு அபார வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான இரண் டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி யில் இலங்கை அணி 157 ஓட்டங் களினால் வெற்றி பெற்றது.

செஸ்டர் லீ ஸ்ட்ரீட் - ரிவர்ஸைட் மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முத லில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மா னித்தது.

இதன்படி களமிறங்கிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக் களை இழந்து 256 ஓட்டங்க ளைப் பெற்றுக் கொண்டது.

இலங்கை சார் பில் திலகரத்ன டில்'hன் 88 ஓட்டங்களையும் பிரியன்ஞன் 43 ஓட்டங்களையும் குமார் சங்கக்கார 40 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் குர்னி 3 விக்கெட் டையும், அன்டர்சன் 2 விக்கெட்டை யும், ஜோர்டன், ரூட் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். பதி லுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலா ந்து அணி 26.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 99 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி யின் சுழற்பந்து வீச்சுக்கு முகம் கொடுக்க முடியாமல் திணறிய அவ்வணியின் இரண்டு பேரைத் தவிர மற்ற அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்கத்துடன் ஆட்ட மிழந்து வெளியேறினர். இயன் மோர்கன் 40 ஓட்டங்களையும் இயன் பெல் 12 ஓட்டங்களை யும் பெற்றதே அதிகூடுதலான ஓட்டமாகும் இங்கிலாந்து அணி முதல் 10 ஓவர்களுக்கு 31 ஓட்டங் களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

பந்து வீச்சில் சசிந்திர சேனா நாயக்க 13 ஓட்டங்களுக்கு 4 விக் கெட்டையும் 16 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டையும் மலிங்க, பிரசாத், மெத்திவ்ஸ் தலா ஒரு விக்கெட்டை யும் பதம் பார்த்தனர். இங்கிலாந் துக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இலங்கை அணி ஒரு 20க்கு இரு பது போட்டி, 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகின்றது.

முன்னதாக இடம்பெற்ற 20க்கு இருபது போட்டியில் இலங்கை அணியும், முதலாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது. தொடரில் 1-1 என சமநிலையில் உள்ளன. இரண்டு அணிகள் மோதும் மூன்றாவது போட்டி 28ம் திகதி மென்சஸ்;டரில் இடம்பெறும்.

இதேவேளை இலங்கை அணி யின் வேகப்பந்நு வீச்சாளர் சுரங்க லக்மால் காயம் காரணமாக ஒரு நாள் போட்டித் தொடரில் இருந்து வெளியேறினார்.

அவர் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டால் டெஸ்ட் போட்டித் தொட ரில் பங்கேற்பார் என அறிவிக்கப் பட்டுள்ளது. இவருக்கு பதிலாக தம் பிக்க பிரசாத் அணியில் இணைத் துக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத் தக்கது இங்கிலாந்து அணி 2001ம் ஆண்டு அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் 86 ஓட்டங் களைப் பெற்றதே குறைந்த ஓட்ட எண்ணிக்கையாகும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி