ஹிஜ்ரி வருடம் 1435 ரஜப் மாதம் பிறை 27
ஜய வருடம் வைகாசி மாதம் 13ம் நாள் செவ்வாய்க்கிழமை
TUESDAY, MAY ,27, 2014
வரு. 82  இல. 124

டில்லியில் ஜனாதிபதி மாளிகை விழாக்கோலம்: பிரதமரானார் மோடி

* ராஜ் நாத்;, சுஷ்மா, வெங்கையா நாயுடு உட்பட 45 பேர் அமைச்சர்களாக பதவிப்பிரமாணம்

* பொன். இராதா கிருஷ்ணனுக்கு இணை அமைச்சு

இந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திர மோடி நேற்று மாலை சுபவேளையில் பதவியேற்றுக்கொண்டார். சார்க் நாடுகளின் தலைவர்கள் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலர் கலந்துகொண்ட பதவியேற்பு நிகழ்வு இந்திய குடியரசுத் தலைவர் மாளிகையான ராஷ்டிரபதி பவனில் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது.இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி முன்னிலையில் நடைபெற்ற இந்தப் பதவியேற்பு நிகழ்வில், 23 அமைச்சரவை அமைச்சர்களும், தனிப்பொறுப்புடன் கூடிய மத்திய இணை அமைச்சர்கள் 10 பேரும், மத்திய இணை அமைச்சர்கள் 12 பேரும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

விவரம்

வைகோவும் ஆதரவாளர்களும் டில்லியில் கைது

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து . . .

விவரம்


குழந்தைகள் மத்தியில் வைரஸ் நோய், வாந்தி, வயிற்றுவலி நோயின் அறிகுறிகள்

பெற்றோர்களுக்கு அறிவுறுத்தல்

இந்நாட்களில் குழந்தைகள் மத்தியில் வைரஸ் காய்ச்சல் நோய் பரவுவதாக குழந்தை நோய் சிகிச்சை நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவி த்துள்ளார்.

விவரம்

அரசியலில் கால் பதித்து இன்றுடன் 44 ஆண்டுகள் பூர்த்தி

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அரசியலில் கால்பதித்து இன்றுடன் 44 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.சிறந்த ஆளுமை, துணிவு, அரசியல் சாணக்கியம் மிக்க தலைமைத்துவத்திற்குப் பாத்திரமான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தாம் பிறந்த கிருவாபத்துவ என்ற இடத்துக்கு மட்டுமின்றி முழு இலங்கைக்கும் உரித்தான கெளரவ தலைவராகத் திகழ்கிறார்.

விவரம்

முல்லைத்தீவு கடற்பரப்பில் ஹெலிகொப்டர் பாகங்கள் மீட்பு

* யாருக்கு சொந்தமானது
  எப்போது விழுந்தது ?

விரிவான விசாரணை ஆரம்பம்

முல்லைத்தீவு, சாலை கடற்பரப்பிலிருந்து ஹெலிகொப்டர் ஒன்றின் பாகங்களை கடற்படையினர் மீட்டெடுத்துள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் பிரசன்ன கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.கடற்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து வட பிராந்திய கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே பாகங்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். முல்லைத்தீவு வடக்கு.

விவரம்


 

மன்னார் உப்புக்குளம் கிராமத்துக்கு முதற் தடவையாக விஜயம் செய்த மீள்குடியேற்ற அமைச்சர் குணரட்ன வீரக்கோன் மக்களின் குறைகளைக் கேட்டறிந்துகொண்டார். அமைச்சர் ரிஷாட் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக், வட மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் ஆகியோர் மக்களுடன் கலந்துரையா
டுவதைப் படத்தில் காணலாம்.



 

நரேந்திரமோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில் கலந்துகொள்வதற்காக சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் டில்லி விமான நிலையத்தில் வரவேற்கப்பட்டபோது எடுக்கப்பட்ட படம்.






~ ஒரு பிராந்தியத்தின் சமாதானத்தை நிலைபெறச் செய்யும் போது இனங்களின் இறைமையையும் ஆட்புல ஒருமைப்பாட்டையும் தொடர்ந்தும் பாதுகாப்பது அவசியம்''

2014 .05. 21
சீனாவில்...