ஹிஜ்ரி வருடம் 1435 ரஜப் மாதம் பிறை 27
ஜய வருடம் வைகாசி மாதம் 13ம் நாள் செவ்வாய்க்கிழமை
TUESDAY, MAY ,27, 2014
வரு. 82  இல. 124
 

அயடின் குறைபாட்டினால் மனவளர்ச்சி பாதிக்கும்

அயடின் குறைபாட்டினால் மனவளர்ச்சி பாதிக்கும்

கர்ப்ப காலத்தில் அயோடின் குறைபாடு இருந்தால் அது பிறக்கப் போகும் குழந்தையின் மன வளர்ச்சியை பாதிக்கலாம் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

கர்ப்ப காலத்தில் தாய்மார்கள் அயடின் சத்து நிறைந்த மீன் மற்றும் பால் போன்ற உணவுகளை போதுமான அளவில் உட்கொள்ளாவிட்டால் பிறக்கப் போகும் குழந்தையின் அறிவுத்திறன் மற்றும் வாசிப்புத் திறன் ஆகியவை ஒப்பீட்டளவில் மற்ற குழந்தைகளை விட குறைவாக இருந்ததாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ஆரம்பக் கல்வி சிறார்களிடையே நடத்தப்பட்ட ஆய்விலேயே இந்த முடிவுகள் தெரிய வந்துள்ளது. அயடின் சத்து அதிக அளவிலுள்ள கடற்பாசியிலிருந்து தயாரிக்கப்பட்ட கூடுதல் ஊட்டச் சத்து அளிக்கக் கூடிய உணவு வகையையும் கர்ப்பிணித் தாய்மார்கள் தவிர்க்க வேண்டும் எனவும் அந்த ஆய்வு கூறுகிறது.

இவற்றில் அதிகளவு அயடின் சத்து காணப்படுவதால் அதுவும் நல்லதல்ல என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். உலகளவில் தவிர்க்கப்படக் கூடிய மூளை பாதிப்புக்கள் ஏற்படுவதற்கு கடுமையான அயடின் பற்றாக்குறை ஒரு முக்கிய காரணமாக உள்ளது.

தேவைக்கேற்ற அளவு அயடின் சத்து அவசியம் என்கிறது ஆய்வு முடிவுகள்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி