ஹிஜ்ரி வருடம் 1435 ரபீஉனில் ஆகிர் மாதம் பிறை 09
விஜய வருடம் தை மாதம் 28ம் நாள் திங்கட்கிழமை
MONDAY, FEBRUARY , 10, 2014
வரு. 82  இல. 35
 

தகுதியை ஆராயலாமா?

தகுதியை ஆராயலாமா?

அம்மா? இந்த ஏழைக்குப் பிச்சை போடுங்கள் என்று ஒரு குரல் வீதியில் கேட்டது. பெண்மணி ஒருத்தி கையில் உணவுப் பாத்திரத்துடன் வெளியே வந்தாள். அவளுடன் அவள் மகனும் வந்தான்.

அந்தப் பிச்சைக்காரனுக்கு உடல் ஊனம் ஏதும் இல்லை. நல்ல வலிமை உடையவனாக அவன் இருந்தான். தான் கொண்டு வந்திருந்த உணவைப் பிச்சைக்காரனின் பாத்திரத்தில் போட்டாள் அவள். நன்றி சொல்லிவிட்டு அவனும் அங்கிருந்து சென்றான். இளைஞனான அவளின் மகன் “இந்தப் பிச்சைக்காரனுக்கு என்ன கேடு? உடல் வலிமைதான் இருக்கிறதே உழைத்துப் பொருள் ஈட்டினால் என்ன? இப்படிப்பட்ட சோம்பேறிக்குப் பிச்சை போடலாமா?” என்று கேட்டான். அதற்கு அவள் “மகனே! பிச்சை கேட்டு வருபவரை நாம் இறைவனாகவே கருத வேண்டும். கொடுப்பதற்கு நாம் தகுதி உடையவர்களா என்றே சிந்திக்க வேண்டும். அவரின் தகுதியை ஆராய நீயும் நானும் யார்? மற்றவர் தகுதியைப் பற்றி ஆராயும் சிந்தனையே தவறானது” என்றாள்.

“அம்மா! இனி இப்படிப் பேச மாட்டேன். என்னை மன்னியுங்கள்” றான் அவன்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி