ஹிஜ்ரி வருடம் 1435 ரபீஉனில் ஆகிர் மாதம் பிறை 09
விஜய வருடம் தை மாதம் 28ம் நாள் திங்கட்கிழமை
MONDAY, FEBRUARY , 10, 2014
வரு. 82  இல. 35
 

மாணவர்கள் சிந்தித்து விடையளிப்பதற்கு இன்றைய பரீட்சை முறை மிகவும் உகந்தது

மாணவர்கள் சிந்தித்து விடையளிப்பதற்கு இன்றைய பரீட்சை முறை மிகவும் உகந்தது

ஹீற்போது, பரீட்சை முறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை நன்கு உணரக் கூடியதாக உள்ளது. ஒரு வினாவை நேரடியாகத் தற்போது கேட்பதில்லை. சிந்தித்து விடயத்தை ஆராய்ந்து விடைய ளிக்கவே சந்தர்ப்பம் வழங்கப்படு கிறது. அதாவது, முதலில் ஒரு சம்பவம் வழங்கப்பட்டு பின்னர், அதிலுள்ள மூலகங்களைக் கொண்டு வினாக்கள் வினவப்படுகின்றன. அச்சம்பவங் கள் அன்றாட வாழ்வுடன் நெருங்கிய தொடர்புடைய தாக இருக்கும். உதாரணங்களை இங்கு பார்க்கலாம். சலீம், தனது நண்பன் ஹசனுடன் கிராமத்திலுள்ள சந்தைக்குப் பொருட்கள் வாங்கச் சென்றான். சில பழவகைகளும், வல்லாரைக்கீரையும், மீனும் வாங்க விரும்பினான். மீன் கடையில், ஒரு மீனின் பாதியை அவன் கேட்டபோது, மீன்காரன் மீனைக்கத்தியால் குத்தி, சமப்படுத்திப் பாதியாக வெட்டிக் கொடுத்தனுப்பினான்,

வினா

(1) அன்றாடம் உணவில் பழங்கள் சேர்க்கப்பட வேண்டியதன் முக்கியத்துவம் யாது?

(2) சலீம், வல்லாரைக் கீரையை வாங்க விரும்பியதன் காரணத்தை அறிவீர்களா?

3. மீனை, சமபாதியாகப் பிரிக்க, கத்தியின் துணியைக் கொண்டு சமன் செய்தது சரியா? பிழையா?

(**) சரி எனக் கூறுகின்aர்களாயின் அதன் விளக்கத்தை ஆராயுங்கள்.

(**) பிழை எனின், அதற்கான காரணங்களை முன்வையுங்கள். (இவ்வாறான வினாக்கள் சிந்தித்து விடை எழுத வழிவகுக்கின்றன.)

உயிரியல் பகுதியில் தரப்பட்ட வினாவையும், விடையையும் அவதானிப்போம்.

வினா: குறித்த சூழல் ஒன்றில் வளருகின்ற தாவரங்களின் இலைகள் பளபளப்பான மேற்பகுதியைக் கொண்டிருப்பதைக் காணக் கூடியதாக உள்ளது. அத்தோடு, அத்தாவரங்களின் சில பகுதிகள் முட்களைக் கொண்டதாகவும் உள்ளன.

(***) மேலே குறிப்பிட்ட இயல்புகளைக் கொண்டதாவரங்கள் எவ்வகையான சூழலில் பொதுவாகக் காணப்படுகின்றன? வரன்பிரதேசம்/ உலர் சூழல்

(***) மெழுகு போன்ற பதார்த்தங்களின் காரணமாக இலைகள் பளபளப்பான மேற்பரப்பைக் கொண்டிருந்தன. இவ்வியல்புத் தாவரங்களுக்கு எவ்வகையில் பயனுடையதாகின்றது? பளபளப்பான மேற்பரப்பைக் கொண்டிருந்தன. இவ்வியல்புத் தாவரங்களுக்கு எவ்வகையில் பயனுடையதாகின்றது? ஒளியைப் பளபளப்பான மேற்பரப்பு தெறிப்படையச் செய்கிறது. இதனால் ஆவியுயிர்ப்புக் குறைக்கப்படுகின்றது.

(***

) மேற்கூறிய சூழலில் வளர்கின்ற தாவரங்களில், காணப்படலாமென எதிர்பார்க்கக் கூடிய வேறு மூன்று இயல்புகளைக் குறிப்பிடுங்கள்.

* சதைப்பற்றான இலைகள் அல்லது தண்டுகள் காணப்படுதல்.

* பால் போன்ற சுரப்புகள் காணப்படுதல்.

* இலைகள் சிறிதாகவும், அல்லது செதிலிலை கொண்டதாகவும் இருத்தல்.

* மேற்றோல் மயிர்களைக் கொண்டிருத்தல்.

விஞ்ஞானத்தில், பகுதி ஏ, கட்டமைப்புக் கட்டுரை வினாக்களை ஆராய்வோமாயின், விஞ்ஞான எண்ணக்கருக்கள், கோட்பாடுகள், நியதிகள், பற்றியும், நாளாந்த நிகழ்வுகள் சந்தர்ப்பங்களைப் பற்றித் தெளிவானவிதத்தில் வினாக்கள் தரப்படும். இவற்றிற்குத் தெளிவான சுருக்கமான விடைகள் கொடுக்கப்படல் வேண்டும். கொடுக்கப்படும் பிரச்சினைகளுக்கு, கற்றல் செயற்பாடுகள் மூலம் பெற்ற அறிவையும், விளக்கத்தையும் பிரயோகித்து குறுகிய விடைகளை எழுத வேண்டும். செயல்முறை மூலமான அனுபவங்களின் நேரடியான வினாக்கள் வினவுவதால் அனுபவங்களில் மாணவர்களுக்கு குறுகிய விடை எழுதப் பயன்படும்.

விஞ்ஞானத்தில் பகுதி கட்டுரை வினாக்களை ஆராய்வோமானால் இங்கு பரந்த விடைகள் எதிர்பார்க்கப்படுகின்றன. செய்துள்ள செயற்பாடுகளின் அடிப்படையிலும் கற்றல் அனுபவங்களைப் பிரயோகித்தும் இலகுவாக மாணவர்களால் விடையளிக்க முடியும். மாணவர் கற்ற விடயங்களில் தேர்ச்சி அடைந்துள்ளார்களா என அறிவதற்காகவே இதில் தரப்பட்டுள்ளவினாக்கள் அமைந்திருக்கும். மாணவர்கள் செயற்பாடுகள் மூலம், அனுபவ ரீதியில் கற்றுள்ளார்களானால் சிறப்பான விடைகளை எழுதமுடியும். யதார்த்தமான கணிப்பீட்டு முறை மாணவர்களின் நன்மைக்காகவே ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதனால் செயற்பாடுகள் மூலம் கற்று, முன்னேற்றப்பாதையை அடைய முடியும். ஏனைய பாடங்களையும், தேர்ச்சிமட்டங் களை அடைய, அனுபவம் மூலம் கற்றால் சிறந்த பெறுபேறுகளைப் பெறவாய்ப்புண்டு.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி