ஹிஜ்ரி வருடம் 1435 ரபீஉனில் ஆகிர் மாதம் பிறை 09
விஜய வருடம் தை மாதம் 28ம் நாள் திங்கட்கிழமை
MONDAY, FEBRUARY , 10, 2014
வரு. 82  இல. 35
 

செலிங்கோ லை/ப் காப்புறுதிதாரர்கள் 300 பேருக்கு 2014 வெற்றிகரமாக ஆரம்பம்

செலிங்கோ லை/ப் காப்புறுதிதாரர்கள் 300 பேருக்கு 2014 வெற்றிகரமாக ஆரம்பம்

குடும்ப சவாரி 7 சுபர் சீட்டிழுப்பை நடத்திய ஆயுள் காப்புறுதி முன்னோடி மேலும் 1200 பேருக்கு வெகுமதிகள்

செலிங்கோ லைஃப் காப்புறுதிதாரர்கள் 300 பேரும் அவர்களின் குடும்பத்தவர்களும் 2014 ஐ வெற்றிக்களிப்புடன் தொடங்கியுள்ளனர். ‘குடும்ப சவாரி 7’ ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட சுபர் சீட்டிழுப்பே இந்த வெற்றிக்கு காரணமாகும்.

களுத்துறை, ஹெட்டன், கொழும்பு, கணேமுல்லை மற்றும் திருகோணமலையில் இருந்து ஐந்து குடும்பத்தவர்கள், இந்த இறுதி வெற்றிவாய்ப்பை பெற்றுக் கொண்டனர். இவர்கள் இதுவரை கனவு கண்டு வந்த சகல செலவுகளுடனும் கூடிய ஜப்பானுக்கான விடுமுறைப் பயணம் நனவாகப் போகின்றது.

இந்த இறுதி சீட்டிழுப்பின் மூலம் மேலும் பத்து காப்புறுதிதாரர்களின் குடும்பம் சீனாவுக்கும், 35 குடும்பங்கள் சிங்கப்பூருக்கும், செல்லவுள்ளதோடு இன்னும் 250 குடும்பத்தினர் லெஷர் வேர்ள்டில் ஒரு நாளைக் கழிக்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளனர்.

இந்த வெற்றிக் குடும்பங்களின் 1200 பேருடன் சேர்த்து 2013 நவம்பர் சீட்டிழுப்பில் வென்ற 263 செலிங்கோ காப்புறுதிதாரர் குடும்பங்களைச் சேர்ந்த 1060 பேரும் சிங்கப்பூர் விடுமுறை மற்றும் லெஷர் வேர்ள்டில் விடுமுறை என்பனவற்றுக்கான வாய்ப்பை பெறவுள்ளனர்.

இந்த உள்நாட்டு வெளிநாட்டு விடுமுறைகள் அனைத்தும் இவ்வாண்டு மார்ச், ஏப்பிரல் மற்றும் மே மாதங்களில் இடம்பெறவுள்ளன.

‘எமது வாடிக்கையாளர்களின் ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் வாய்ப்பளிப்பதும், ஒன்றாக அவர்களை பயணிக்கச் செய்து மறக்கமுடியாத ஒரு அனுபவத்தை அவர்களுக்கு ஏற்படுத்துவதுமே எமது நோக்காகும்’ என்று கூறினார் செலிங்கோ லைஃப்பின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஆர். ரெங்கநாதன். காப்புறுதிதாரர்களுக்கும் அவர்களின் குடும்பத்தவர்களுக்குமான ‘வாழ்க்கை பாசம் பாதுகாப்பு’ என்ற செலிங்கோ லைஃப்பின் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையிலேயே இது அமைந்துள்ளது’ என்று அவர் மேலும் விளக்கினார்.

2007ல் தொடங்கப்பட்ட குடும்ப சவாரி ஊக்குவிப்புத் திட்டம், ஆயுள் காப்புறுதி பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், ஆயுள் காப்புறுதி ஒப்பந்தங்களை கொள்வனவு செய்தல் மற்றும் ஓய்வூதியக் கணக்குத் திட்டத்தை தொடங்கல் என்பனவற்றை ஊக்குவிப்பதையும், மேலும் இவற்றை செயற்படும் நிலையில் தொடர்ந்து வைத்திருக்க ஊக்குவித்தல், வாடிக்கையாளரின் விசுவாசத்திற்கான வெகுமதிகளை வழங்கல் என்பனவற்றையும் அடிப்படையாகக் கொண்டதாகும்.

தற்போது நிறைவடைந்துள்ள ஏழாவது குடும்ப சவாரி திட்டத்துக்கான ஊக்குவிப்பு காலம் 2013 செப்டெம்பர் முதல் டிசம்பர் வரையில் அமைந்திருந்தது. இந்தக் காலப் பகுதியில் செலிங்கோ லைஃப்பில் நீண்ட கால ஆயுள் காப்புறுதிக் கொள்கை மற்றும் ஓய்வூதியக் கணக்கு என்பனவற்றை கொண்டிருந்தவர்கள் வெற்றிவாய்ப்பை வெல்லும் தகுதியைப் பெற்றிருந்தனர். இந்த காப்புறுதி கொள்கைகளும் கணக்குகளும் அவை எவ்வளவு காலம் பேணப்பட்டு வருகின்றன என்பதைப் பொறுத்து வெற்றிக்கான பல்வேறு வாய்ப்புகளை பெற்றன.

தற்போது காப்புறுதிக் கொள்கையொன்றைக் கொணடிருப்பவர்கள் அல்லது புதிதாக காப்புறுதிக் கொள்கையொன்றை பெற்றுக்கொள்பவர்கள் மாதாந்தம் 20000 ரூபாவை சந்தாவாகச் செலுத்தும் பட்சத்திலும் 31 டிசம்பர் 2013 ல் குறைந்தபட்சம் மூன்று சந்தாக்களை செலுத்தியுள்ள நிலையிலும், அல்லது இந்தத் திகதியில் தமது ஓய்வூதியக் கணக்கில் 1.5 மில்லியன் ரூபாவை மீதியாகக் கொண்டிருப்பவர்களும், ஜப்பானில் விடுமுறை வாய்ப்பை வெல்லும் தகுதிக்குடையவர்கள் என்று கம்பனி அறிவித்திருந்தது. சீனா சுற்றுப் பயணத்துக்கான வாய்ப்பை வெல்ல ஒரு வாடிக்கையாளர் இதே காலப் பகுதியில் மாதாந்தம் 10000 ரூபா சந்தா செலுத்துபவராக அல்லது ஓய்வூதியக் கணக்கில் ஒரு மில்லியன் ரூபா மீதியைக் கொண்டுள்ளவராக இருக்க வேண்டும்.

தற்போது காப்புறுதிக் கொள்கையொன்றைக் கொண்டிருப்பவர்கள் மாதாந்தம் குறைந்த பட்சம் 3500 ரூபாவை சந்தாவாக செலுத்துபவர்களாகவும், அல்லது 2013 டிசம்பர் 31 க்கு முன் ஆயுள் காப்புறுதிக் கொள்கையொன்றை புதிதாகக் கொள்வனவு செய்து இந்தக் காலப் பகுதிக்கான சந்தாக்களை செலுத்தியுள்ள நிலையிலும், அல்லது ஓய்வூதியக் கணக்கில் குறிப்பிட்ட திகதியில் 750000 ரூபாவை மீதியாகக் கொண்டிருப்பவர்களும் சிங்கப்பூர் செல்லும் வாய்ப்பை வெல்லும் தகுதியை பெற்றனர். அதேநேரம் ஆயிரம் ரூபாவை மாதாந்தச் சந்தாவாகச் செலுத்துபவர்கள் மற்றும் ஓய்வூதியக் கணக்கில் 250000 ரூபாவை மீதியாகக் கொண்டிருப்பவர்கள் லெஷர்வேர்ள்ட் சுற்றுலாவை வெல்லும் வாய்ப்பை பெற்றனர்.

இவற்றுக்கு மேலதிகமாக செலிங்கோ லைஃப் வாடிக்கையாளர்கள் கம்பனி மீது கொண்டுள்ள விசுவாசத்துக்கான ஊக்குவிப்பாக அவர்கள் கம்பனியோடு இணைந்துள்ள ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒரு மேலதிக வாய்ப்பு என்ற வகையில் ஆகக் கூடியது பத்து மேலதிக வாய்ப்புகளும் இந்தத் தெரிவின் போது வழங்கப்பட்டது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி