ஹிஜ்ரி வருடம் 1435 ரபீஉனில் ஆகிர் மாதம் பிறை 09
விஜய வருடம் தை மாதம் 28ம் நாள் திங்கட்கிழமை
MONDAY, FEBRUARY , 10, 2014
வரு. 82  இல. 35
 

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு உதவவென குடிவரவு சேவைகள் மையம் திறந்துவைப்பு

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு உதவவென குடிவரவு சேவைகள் மையம் திறந்துவைப்பு

இலங்கைக்கு வருகைத்தரும் சுற்றுலாப் பயணிகள் அனைவருக்கும் பரந்த மற்றும் விரும்பிய பயனை அளிக்கக்கூடிய குடிவரவு சேவையொன்றுக்கு வசதி யேற்படுத்திக் கொடுக்கும் நோக்கத்துடன் குடிவரவு சேவைகள் மையம் (ஐளுஊ) கொழும்பில் தனது நடவடிக்கைகளை அண்மையில் ஆரம்பித்தது.

இலங்கைக்கு வருகை தருவோரின் திடீர் உட்பாய்தலுடன் சுற்றுலாத்துறையில் மேலும் ஒரு அதிகரிப்பை நாடு எதிர்பார்க்கும் நிலையில், குடிவரவு சேவைகள் மையமானது (ஐளுஊ) அதிகரித்துவரும் குடிவரவு குறித்த தேவைகளுக்கு வசதியேற்படுத்திக் கொடுக்கும் பொருட்டு ஸ்தாபிக்கப்பட்டது.

சுற்றுலாப் பயணிகள், வர்த்தகம், முதலீட்டாளர், வேலைவாய்ப்பு, வாழ்க்கைத் துணை, வெளிநாட்டு, மதம்சார், மாணவர் மற்றும் ஓய்வுநிலை ஆகியவற்றின் கீழான இலங்கை விசா விண்ணப்பங்கள் மற்றும் கால எல்லை நீடிப்புக்கள் போன்ற குடிவரவு தொடர்புடைய விடயங்கள் அனைத்திற்கும் வசதி யேற்படுத்திக் கொடுப்பதற்கான பிரத்தியேக பு+ரண உரிமையும் குடிவரவு சேவைகள் மையத்திற்கு (ஐளுஊ) குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

குடிவரவு சேவைகள் மையத்தினால் (ஐளுஊ) வழங்கப்பட்டுவரும் ஏனைய சேவைகளுக்கு மத்தியில் நாட்டிற்கு வருகை தருவோருக்கு உதவும் பொருட்டு பின்புல காரி யாலய அழைப்பு மையமொன்றாக செயற்படுவதற்கென உதவிக்கருமப்பீடம் (ர்நடி னுநளம) ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தகைய தகவல் வழங்கும் கருமபீடம் (ர்நடி னுநளம) வருகை தருவோருக்கென குறித்த தகவலை வழங்குவதுடன், பிரயாணம் தொடர்பான எதுவித வினாக்களும் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் ஒருங்கிணைப்புடன் உரிய பதில்களை அளிக்கவுள்ளது.

நாட்டிற்கான வெளிநாட்டு முதலீ டுகளைக் கவரும் வகையில், வியாபார வாடிக்கையாளர்களுக்கு மொத்த விசா மற்றும் குடிவரவு தகவல் மற்றும் அது தொடர்பான சேவைகளை ஒரே கூரையின் கீழ் வழங்கிவரும் குடிவரவு சேவைகள் மையத்தின் பிரயத்தனங்களின் அங்கமாக, வியாபார முதலீட்டாளர் வீசா வழங்கிடும் கருமபீடமொன்றும் இயங்கிவருகின்றது.

குடிவரவு சேவைகள் மையத்தின் பொது முகாமையாளர் ஸ்ரீ மந்த சேனாரத்ன இதுகுறித்தி தெரிவிக்கையில், துணிச்சல்மிக்க இத்தகைய நடவடிக்கையானது விசா விண்ணப்பதாரர்களுக்கும், தங்கள் விசாக்களின் கால எல்லையை நீடித்துக்கொள்ள விரும்புவோருக்கும் சௌகரியமான செயல்முறையொன்றை வழங்கவுள்ளதுடன், இலங்கைக்கு வருகை தருவோருக்கான உள்நுழைவைப் பெற்றுக ;கொள்வதில் தொந்தரவற்றதோர் இடமாக இலங்கையை விளங்கச் செய்வதிலும் முக்கிய வகிபாகத்தைக் கொண்டிருக்கவுள்ளது எனக் குறிப்பிட்டார்.

குடிவரவு சேவைகள் மையமானது, வாய்ப்பு வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் ஒன்றாகவே இயங்கிவருவதாகவும், விசாவொன்றை வழங்குவதில் அல்லது நிராகரித்தல் குறித்த தீர்மானமோ, குடிவரவு மற்றும் விசா பற்றிய கொள்கைகளின் பிரகாரம் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினாலேயே பிரத்தியேகமான முறையில் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி