ஹிஜ்ரி வருடம் 1434 துல்ஹிஜ்ஜஹ் மாதம் பிறை 02
விஜய வருடம் புரட்டாசி மாதம் 22ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, OCTOMBER , 08, 2013
வரு. 81 இல. 238
 

ஐ. பி. எல். சூதாட்டம் பற்றி விசாரணை; மூவர் குழு அமைக்க உச்ச நீதிமன்று சிபாரிசு

ஐ. பி. எல். சூதாட்டம் பற்றி விசாரணை; மூவர் குழு அமைக்க உச்ச நீதிமன்று சிபாரிசு

ஐ. பி. எல். ‘ஸ்பாட் பிக்சிங்’ சூதாட்டம் குறித்து கிரிக்கெட் சபை நியமித்த குழு சட்ட விரோதமானது என்று மும்பை உயர் நீதிமன்றம் கடந்த ஜுலை 30 ஆம் திகதி அறிவித்தது.

இந்த குழு சென்னை அணியின் கெளரவ உறுப்பினர் குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ராஜ்குந்த்ரா ஆகியோரை நிரபராதிகள் என்றும், அவர்களுக்கு சூதாட்டத்தில் தொடர்பு இல்லை என்றும் தெரிவித்தது. இதை எதிர்த்து பீகார் கிரிக்கெட் சங்கம் தொடர்ந்த வழக்கில் தான் கிரிக்கெட் சபையின் விசாரணைக் குழு கூட்ட விரோதமானது என்று மும்பை உச்ச நீதிமன்றம் கூறி இருந்தது. இது தொடர்பாக கிரிக்கெட் சபை, பீகார் கிரிக்கெட் சங்கம் தொடர்ந்த வழக்குகள் உச்ச நீதிமன்றில் நடந்து வருகின்றன.

இது நேற்று விசாரணைக்கு வந்தது. ஐ. பி. எல். சூதாட்டம் குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட புதிய குழுவை அமை க்க நீதிபதிகள் சிபாரிசு செய்தனர்.

இதுபற்றி இன்று பதில் அளிக்க வேண்டும் என்று கிரிக்கெட் சபை சட்ட த்தரணி பீகார் கிரிக்கெட் சங்க சட்டத் தரணிக்கும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஐ. பி. எல். ஸ்பாட்பிக்சிங் குறித்து விசாரிக்க அருண் ஜேட்லி, நிலாய் தத்தா ஆகியோரை கொண்ட சிறப்பு குழுவை நியமிக்க இருப்பதாக கிரிக்கெட் சபை முன்னதாக தெரிவித்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்து அதை நிராக ரித்து விட்டது.

உச்ச நீதிமன்றம் சிபாரிசு செய்த குழு விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

உச்ச நீதிமன்றத்தின் இந்த புதிய உத்தரவு கிரிக்கெட் சபைத் தலைவர் என் சீனிவாசனுக்கு பின்னடைவை ஏற் படுத்தி உள்ளது. அவர் தலைவர் பதவியை பொறுப்பேற்றுக் கொள்வதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டுள்ளது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி