ஹிஜ்ரி வருடம் 1434 ஷஃபான் மாதம் பிறை 01
விஜய வருடம் வைகாசி மாதம் 28ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, JUNE , 11 , 2013
வரு. 81 இல. 136
 

அமெரிக்க அணு குண்டுகள் நெதர்லாந்தில் பதுக்கி வைப்பு

அமெரிக்க அணு குண்டுகள் நெதர்லாந்தில் பதுக்கி வைப்பு

அமெரிக்காவின் சுமார் 22 அணு ஆயுதங்கள் நெதர்லாந்து நிலப்பகுதியில் உள்ள கிடங்கில் வைக்கப்பட்டிருப்பதாக நெதர்லாந்தின் முன்னாள் பிரதமர் ருட் லுப்பர்ஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த 1982 முதல் 94 வரையான காலத்தில் நெதர்லாந்து பிரதமராக இருந்த லுப்பர்ஸ், இந்த அணு குண்டுகள் ப்ரான்டலில் இருக்கும் வொல்கல் விமானத் தளத்தில் நிலத்துக்கு அடியில் பாதுகாப்பான அறைகளில் வைக்கப்பட்டி ருப்பதாக குறிப்பிட்டார்.

நஷனல் ஜோக்ரபி தொலைக்காட்சியின் ஆவனப் படம் ஒன்றிற்கு பேட்டி அளித்தபோதே லுப்பர்ஸ் இந்த தகவலை அம்பலப்படுத்தியுள்ளார். “அந்த முட்டாள் தனமான விடயம் 2013 இலும் அங்கு இருக்கும் என்று நான் நினைக்கவில்லை” என்றார். நெதர்லாந்தில் அணு ஆயுதம் பதுக்கி வைத்திருப்பதாக நீண்ட காலமாக வதந்திகள் இருந்து வந்தன. எனினும் அதனை நெதர்லாந்து முன்னாள் பிரதமர் முதல் முறையாக உறுதி செய்துள்ளார்.

அமெரிக்கா கடந்த 1960 களில் மேம்படுத்திய பி 61 ரக அணு குண்டுகளே நெதர்லாந்தில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக டெலிகிராப் நாளிதழுக்கு நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி