ஹிஜ்ரி வருடம் 1434 ஷஃபான் மாதம் பிறை 01
விஜய வருடம் வைகாசி மாதம் 28ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, JUNE , 11 , 2013
வரு. 81 இல. 136

போலி டாக்டர்களின் மோசடியில் இருந்து அப்பாவி நோயாளிகளை காப்பாற்ற வேண்டும்

போலி டாக்டர்களின் மோசடியில் இருந்து அப்பாவி நோயாளிகளை காப்பாற்ற வேண்டும்

இலங்கையில் நோயாளிகளின் எண்ணிக்கை கட்டுக்கடங்காத அளவுக்கு அதிகரித்துள்ளது. அரசாங்க ஆஸ்பத்திரிகளில் இலவசமாக நாளாந்தம் பல்லாயிரக்கணக்கான நோயாளிகள் வெளியக நோயாளிகளாகவும் ஆஸ்பத்திரியில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளியாகவும் இருக்கிறார்கள்.

இவற்றையும் விட 500 இற்கும் மேற்பட்ட தனியார் ஆஸ்பத்திரிக ளிலும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருகின்றது. தனியார் ஆஸ்பத்திரிகளை விட வைத்தியர்கள் தங்கள் வீடுகளிலும் அல்லது வேறு இடங்களிலும் ஆரம்பத் திருக்கும் வைத்திய நிலையங்கள் ஆயிரக்கணக்கில் நாடெங்கி லும் இருக்கின்றன.

இவற்றுக்கு நாளொன்றுக்கு சுமார் 5 இலட்சம் நோயாளிகள் சென்று சிகிச்சை பெறுவதாக சமீபத்தில் சுகாதார அமைச்சு நடத்திய ஆய் வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. இந்தளவுக்கு ஆஸ்பத்திரி களும், வைத்தியர்களும் அதிகரித்திருப்பதனால் சிறிதளவு வைத் தியம் தெரிந்தவர்களும் மருந்துசாலைகளில் சிற்றூழியர்களாக வேலை செய்தவர்களும், பாமசிகளில் விற்பனையாளர்களாக வேலை செய்தவர்களும் காய்ச்சலுக்கு இந்த மருந்து, வயிற்று வலிக்கு இந்த மருந்துதான் எடுக்க வேண்டுமென்பதை தங்கள் அனுபவம் மூலம் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

அழகாக காற்சட்டை சேர்ட் அணிந்து ஒரு டையுடன் சோதனைக் குழாயை கழுத்தில் மாட்டிக் கொண்டால் ஒரு படிக்காத முட் டாளைக்கூட, மக்கள் ஒரு டாக்டர் என்று நம்பிவிடுவார்கள்.

இவ் விதம் நோயாளிகளின் பலவீனத்தையும் அறிவின்மையையும் தெரிந்து கொண்ட சில சமூக விரோதிகள் தாங்கள் வாழ்ந்த பிர தேசத்தில் இருந்து சுமார் 100 கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஒரு பின்தங்கிய கிராமத்தில், தான் சேமித்து வைத்த பணத் தைக் கொண்டு ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் தான் தங்கியிருப்பதுடன் தனது சிகிச்சை நிலையத்தையும் ஆர ம்பிப்பார்கள். வெளியில் வைத்தியசாலைக்குரிய அடையாளக் குறி யுடனான தங்கள் பெயரை டாக்டர் என்றும் பெயருக்கு பின் னால் எம்.பி.பி.எஸ் என்றும் மனசாட்சிக்கு விரோதமாக எழுதி விட்டு நோயாளிக்கு சிசிக்சை செய்யும் பணியை ஆரம்பிப் பார்கள்.

கிராமத்து மக்கள் காய்ச்சலுடன் வந்தால் காய்ச்சலை பார்த்துவிட்டு பெனடோல் வில்லைகளை இரகசியமாக தூளாக்கி அதனை காகிதத்தில் அழகாக மடித்துவிட்டு இதனை காலையிலும், பகல் பொழுதிலும், இரவிலும் தண்ணீரோடு கலந்து குடியுங்கள். அத் துடன் காய்ச்சலுக்கு கொடுக்கும் தண்ணீர் மருந்தை பாமசிக ளில் இருந்து இரகசியமாக வாங்கி வைத்து அதனையும் நோயா ளிக்கு கொடுப்பார்கள்.

இவ்விதம் ஒரு நோயாளிக்கு சிகிச்சையளிப்பதற்கு ஒரு போலி டாக் டருக்கு மூன்று ரூபா மாத்திரமே செலவானாலும் அவர் அந்த ஏழைக் கிராமத்து நோயாளியிடம் இருந்து 10 முதல் 15 ரூபாவை கட்டணமாக அறவிடுவார். இந்த டாக்டரிடம் சென்று சிகிச்சை எடுத்தால் காய்ச்சல் உடனடியாக குணமாகிவிடும் என்ற செய்தி கிராமத்தில் பரவ ஆரம்பித்தவுடன் கிராமத்து மக்கள் தங் கள் நோய்களுக்கு சிகிச்சை பெறுவதற்காக கூட்டம் கூட்டமாக அந்த வைத்தியரிடம் வந்து பணத்தை செலவிடுவார்கள்.

சாதாரண காய்ச்சல், வயிற்றுவலி போன்ற நோய்களை இந்தப் போலி வைத்தியர்கள் குணமாக்கினாலும் அதற்கு அப்பாற்பட்ட பாரதூ ரமான நோய்களை குணமாக்குவதற்கு அவரிடம் வைத்திய அறிவோ, அனுபவமோ இருக்காது. அப்படியிருந்தும் அந்த நோயாளியை ஏன் அனுப்பிடுவான் என்று நினைத்து ஓரிரு தட வைகள் அந்த நோயாளியை அழைத்து மருந்து கொடுத்து பார்ப் பார்.

இவ்விதம் 10 நாளாகியும் காய்ச்சல் குணமாகாமல் இருக் கும் போது அந்த போலி வைத்தியர் இனிமேலும் நாம் இவனு க்கு சிகிச்சையளித்தால் ஆபத்தில் மாட்டிக் கொள்வோம் என்று நினைத்து உடனடியாக அந்நோயாளியை சுமார் 30 முதல் 40 கிலோ மீற்றருக்கு அப்பால் உள்ள அரசாங்க ஆதார வைத்திய சாலைகளுக்கு அனுப்பி வைப்பார்.

அங்கு அதிர்ஷ்டவசமாக நோய் குணமாவதற்கான வாய்ப்பு இருந் தால் அந்நோயாளிகள் குணமாகி கிராமத்துக்கு வந்து போலி டாக்டரையும் சந்தித்து, டாக்டர் ஐயா, நீங்கள் உரிய நேரத்தில் என்னை அங்கு அனுப்பி வைத்ததால் தான் உயிர் தப்பினேன் என்று தெரிவிப்பார்கள்.

ஆனால், இந்த போலி வைத்தியர்கள் நோயை குணமாக்காமல் பண த்துக்காக காலதாமதப்படுத்துவதனால் பல்லாயிரக்கணக்கான நோயா ளர்கள் உரிய நேரத்தில் வைத்திய சிகிச்சைப் பெறமுடியாது மர ணித்தும் இருக்கிறார்கள். இவ்விதம் மரணித்தவர்களில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கிறது.

இலங்கையில் ஏறத்தாழ 40 ஆயிரம் போலி வைத்தியர்கள் நம்நா ட்டு மக்களுக்கு சிகிச்சையளித்து கொள்ளை இலாபம் திரட்டுகி றார்கள். சமீபத்தில் கம்பளையில் இதுபோன்ற போலி வைத்திய நிலையம் பலகாலமாக இயங்கி வந்தது. இந்த போலி டாக்டர் ஒரு வைத்திய நிபுணரின் வைத்திய லைசன்ஸை வைத்துக் கொண்டு மக்களை ஏமாற்றி போலி டாக்டர் பணியை செய்திருக்கிறார்.

சுகாதார அமைச்சுக்கு இரண்டு பணிகள் இப்போது இருக்கின்றன. முதலாவது நம்நாட்டு நோயாளிகளுக்கு வைத்திய சிகிச்சை அளி த்து அவர்களை சுகதேகிகளாக வாழ வைப்பதாகும். அடுத்தது மக்களை ஏமாற்றி வைத்தியம் செய்யும் சுமார் 40 ஆயிரம் போலி வைத்தியர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு எதிராக சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுப்பதாகும்.

இவ்விரு பணிகளையும் நாம் சிறப்பாக நிறைவேற்றிக் கொண்டிருக் கிறோம் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக் டர் பாலித்த மஹிபால தெரிவித்துள்ளார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி