ஹிஜ்ரி வருடம் 1434 ஷஃபான் மாதம் பிறை 01
விஜய வருடம் வைகாசி மாதம் 28ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, JUNE , 11 , 2013
வரு. 81 இல. 136
 

கடுமையாகும் சுவிட்சர்லாந்தின் தஞ்சக் கோரிக்கை சட்டம்

கடுமையாகும் சுவிட்சர்லாந்தின் தஞ்சக் கோரிக்கை சட்டம்

சுவிட்சர்லாந்தில் அகதித் தஞ்சம் கோருவோர் தொடர்பான சட்ட விதிகளை கடுமையாக்குவதற்கு அந்நாட்டு மக்கள் பலத்த ஆதரவினைத் தெரிவித்துள்ளனர்.

தஞ்சக் கோரிக்கை தொடர்பான சட்டங்களில் கடந்த செப்டம்பரில் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் தொடர்பில் நடத்தப்பட்ட மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் 80 வீதமான மக்கள் ஆதரவாக வாக்களித்துள்ளதாக ஆரம்பக்கட்ட முடிவுகள் தெரிவிக்கின்றன.

இந்தப் புதிய சட்ட விதிகளின்படி, இராணுவத்திலிருந்து தப்பிவருபவர்கள் இனிமேல் அங்கு தஞ்சம் கோர முடியாது.

அதேபோன்று வெளிநாடுகளில் உள்ள சுவிஸ் தூதரகங்கள் ஊடாக இனிமேல் எவரும் தஞ்சம் கோர முடியாதபடியும் சட்டத்திருத்தம் வந்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் அகதித் தஞ்சம் கோரிய சுமார் 48,000 விண்ணப்பங்கள் தற்போது ஆய்வில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுவிட்சர்லாந்தின் மிகப் பெரிய கட்சியான சுவிஸ் மக்கள் கட்சி இந்த முடிவை வரவேற்றுள்ளது. அகதி அந்தஸ்து கோரி செல்வந்த நாடுகளுக்கு விண்ணப்பிக்கும் 10 இல் 9 பேரில் பொருளாதார காரணியே பின்னணியில் இருப்பதாக அது குறிப்பிட்டுள்ளது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி