ஹிஜ்ரி வருடம் 1434 ஷஃபான் மாதம் பிறை 01
விஜய வருடம் வைகாசி மாதம் 28ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, JUNE , 11 , 2013
வரு. 81 இல. 136
 

பிரதமரின் விமான பயணத்திற்காக 9 ஆண்டுகளில் 642 கோடி ரூபா செலவு

பிரதமரின் விமான பயணத்திற்காக 9 ஆண்டுகளில் 642 கோடி ரூபா செலவு

பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 9 வருடங்களில் விமான பயணத்துக்காக மட்டும் ரூ. 642 கோடி அரசுப் பணத்தை செலவிட்டுள்ளார். பிரதமர் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களுக்காக இந்த அளவுக்கு செலவாகியுள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் சரத்துப்படி பிரதமர் அலுவலகத்தால் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் இதுவரை 67 வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார். 2004ம் ஆண்டு முதல் முறையாக பிரதமர் பதவிக்கு வந்தது முதல் இந்த வெளிநாட்டுப் பயணங்களை அவர் மேற்கொண்டுள்ளார்.

5 பயணங்களுக்கு பட்டி யல் வரவில்லை. இதில் ஐந்து பயணங்கள் தொடர் பான பட்டியல் விவரம் பெறப்படவில்லை என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த செலவானது விமான பயணங்களுக்கான செலவு மட்டுமே. மீதியுள்ள 62 விமான பயணங்க ளுக்கான செலவு ரூ. 645.45 கோடி எனத் தெரியவந்துள்ளது. ரூ. 26.94 கோடி பிரதமர் மேற்கொண்ட பயணங்களில் அதிகம் செலவான தனிப்பட்ட பயணம் பிரேசில் மெக்ஸிகோவுக்கு அவர் 2012ம் ஆண்டு போனதுதான் அந்த 7 நாள் பயணத்திற்கு மட்டும் ரூ. 26.94 கோடி செலவாகியுள்ளதாம்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி