ஹிஜ்ரி வருடம் 1434 ஷஃபான் மாதம் பிறை 01
விஜய வருடம் வைகாசி மாதம் 28ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, JUNE , 11 , 2013
வரு. 81 இல. 136
 

செவ்வாய் ஒப்பொர்சுனிட்டி இயந்திரம் முக்கிய கண்டுபிடிப்பு

செவ்வாய் ஒப்பொர்சுனிட்டி இயந்திரம் முக்கிய கண்டுபிடிப்பு

செவ்வாய்க் கிரகத்தில் கடந்த 9 ஆண்டுகளாக செயற்படும் ஒப்பொர்சுனிட்டி இயந்திரம் தனது முக்கியமான கண்டுபிடிப்பொன்றை மேற்கொண்டுள்ளது.

களிமண் தாதுகள் என நம்பப்படும் பாறை ஒன்றை ஒப்பொர்சுனிட்டி இயந்திரம் அவதானித்துள்ளது. இந்த பாறை பண்டைய காலத்தில் செவ்வாயில் நீர் இருந்ததற்கு உறுதியான ஆதாரமாக உள்ளதென விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

இது மிக வளம்மிக்கது என ஒப்பொர் சுனிட்டி இயந்திரத்தின் பிரதான ஆய்வாளர் ஸ்டிவ் ஸ்கிரஸ் குறிப்பிட்டுள் ளார். “கடந்த 2004 இல் செவ்வாயில் தரையிறங்கியதை தொடர்ந்து அங்கு நீர் இருந்ததற்கான ஆதாரங்களை திரட்டி வருகிறோம். ஆனால் இங்கு காண்பது வித்தியாசமானது. ஒப்பொர்சுனிட்டி கடந்த காலங்களில் கண்டுபிடித்தவை பெரும்பாலும் கந்தக அமிலமாகவே உள்ளது.

ஆனால் களிமண் தாதுக்களில் மாத்திரமே இயற்கையான நீர் இருப்பதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது” என்று ஸ்கிரஸ் குறிப்பிட்டார். கடந்த 2004 ஆம் ஆண்டு அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸாவினால் அனுப்பப்பட்ட ஒப்பொர்சுனிட்டி இயந்திரம் 90 செவ்வாய் தினங்கள் செயற்படும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டது.

எனினும் அது 3300 செவ்வாய் தினங்கள் கடந்து செயற்பட்டு வருகிறது. எனினும் இந்த இயந்திரத்தின் கைப்பாகம் செயலிழந்துள்ளதோடு அதனது சூரிய சக்தி செயற்பாடும் முறையாக இயங்கவில்லை. அத்துடன் இந்த இயந்திரம் தற்போது பின் பக்கமாகவே பயணித்து வருகிறது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி