ஹிஜ்ரி வருடம் 1434 ஷஃபான் மாதம் பிறை 01
விஜய வருடம் வைகாசி மாதம் 28ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, JUNE , 11 , 2013
வரு. 81 இல. 136
 

கடமையின் எல்லை

கடமையின் எல்லை

கடமையின் எல்லை 1966 ஆம் ஆண்டில் திரையிடப்பட்ட ஒரு ஈழத்துத் திரைப்படம் ஆகும். யாழ்ப்பாண ஆசிரியர் பயிற்சி கல்லூரி ஆங்கில விரிவுரையாளரான எம். வேதநாயகத்தினால் தயாரிக்கப்பட்டது. இது ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட் என்ற ஆங்கில நாடகத்தைத் தழுவி தயாரிக்கப்பட்ட சரித்திரப்படம் ஆகும்.

இத்திரைப்படத்தில் தேவன் அழகக்கோன், எம். உதயகுமார், ஏ. ரகுநாதன், ஜி. நிர்மலா, பொனி ரொபோட்ஸ் முதலானோர் நடித்தார்கள். தயாரிப்பாளர் எம். வேதநாயகம் இத்திரைப்படத்தை இயக்கியதோடு இசையமைப்பையும் பொறுப்பேற்றுக் கொண்டார்.

வித்வான் ஆனந்தராயர், பஸ்தியாம்பிள்ளை, எம். விக்டர் ஆகியோர் திரைக்கதை, வசனம், பாடல்களை எழுதினார்கள். வி. முத்தையா, கமலலோஜனி, அம்பிகா தாமோதரம், புவனேஸ்வரி ஆகியோர் பின்னணி பாடினார்கள். யாழ்ப்பாணம் டச்சுக் கோட்டையைச் சுற்றிய பகுதிகளில் குதிரையோட்டம் முதலான காட்சிகளை எடுத்திருந்தார்கள்.

தயாரிப்பாளர் - இயக்குனரான எம். வேதநாயகம் இத்திரைப்படம் வெளியிடப்படுவதற்கு முன்னரே காலமாகி விட்டார். இத்திரைப்படத்தில் கதாநாயகன் கமலநாதனாக நடித்தவர் இலங்கையில் கராத்தே கலையை பிரபலமடையச் செய்தவரான கிறாண்ட் மாஸ்டர் பொனி ரொபேர்ட்ஸ். மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்முனையைச் சேர்ந்தவராவார்.

இணை ஒளிப்பதிவாளராக பங்காற்றிய கலைஞர் ஏ. ரி. அரசு (திருநாவுக்கரசு) நடிகர், நிழல் படப்பிடிப்பாளர் என்பதோடு சிறந்த ஒப்பனைக் கலைஞருமாவார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி