ஹிஜ்ரி வருடம் 1434 ஷஃபான் மாதம் பிறை 01
விஜய வருடம் வைகாசி மாதம் 28ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, JUNE , 11 , 2013
வரு. 81 இல. 136
 

கவனக் குறைவு அழிவே!

கவனக் குறைவு அழிவே!

போர் வீரன் ஒருவன் தன் குதிரையின் கால் இலாடங்களில் ஒன்றில் ஆணி கழன்றிருப்பதைக் கண்டான். அந்த இலாடத்தில் பிறகு ஆணி அடித்துக் கொள்ளலாம் என்று நினைத்தான்.

திடீரென்று எதிரி நாட்டு வீரர் கள் அந்த நாட்டின் மீது படை யெடுத்து வந்தார்கள். நாட்டைக் காப்பதற்காக அந்த வீரன் தன் குதிரையில் அமர்ந்து போருக்குப் புறப்பட்டான்.

போர்க்களத்தில் எதிரி வீரர்களுடன் அவன் கடுமையாகப் போரிட்டுக் கொண்டிருந்தான். அப்பொழுது அந்தக் குதிரையின் இலாடம் கழன்று விழுந்தது. இலாடம் இல்லாததால் கரடு முரடான நிலத்தில் கால் ஊன்றி நிற்க முடி யாமல் தவித்தது அது. இதனால் நிலை குலைந்த அவனை எதிரி வீரர்கள் கொன்றார்கள்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி