ஹிஜ்ரி வருடம் 1434 ஷஃபான் மாதம் பிறை 01
விஜய வருடம் வைகாசி மாதம் 28ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, JUNE , 11 , 2013
வரு. 81 இல. 136
 

மழை பெய்வதற்கு உதவுகின்ற பக்ரீரியா

மழை பெய்வதற்கு உதவுகின்ற பக்ரீரியா

முதலில் கடலில் இருந்தும் பிற நீர்நிலைகளில் இருந்தும் நீரானது கதிரவனின் வெப்பத்தால் நீராவியாகி மேலெழுந்து சென்று மேகங்களை அடைகின்றது. அப்படி மேலெழுந்து சென்று மேகங்களை அடையும் பொழுது குளிர்வடைந்து நீராக மாறுகின்றது. பின்னர் இந்த நீர்த்தாங்கிய மேகங்களில் (கார்முகில்களில்) இருந்து நீரானது துளிகளாக திவலைகளாக பூமியின் மேற்பரப்பில் விழும் போது மழை ஏற்படுகிறது.

மழை விழும் போது மொத்த நீரும் நிலத்தை அடைவதில்லை. அதில் ஒரு பகுதி நீராவியாகி விடுகிறது. பாலைவனம் போன்ற பகுதிகளில் மொத்த நீரும் ஆவியாகிவிடுவது உண்டு. ஒரு இடத்தில் மழை அதிக மாகப் பெய்யும் காலம் அவ்விடத்திற் குரிய மழைக்காலம் என அழைக் கப்படுகின்றது.

அமெரிக்காவின் மொன்டானா மாநில பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மழை பெய்விக்கும் பக்டீரியாவை கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் வரண்ட பகுதிகளிலும் மழை பெய்விக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

தாவரங்கள் மேல் படரும் பக்டீரியா காற்று மூலம் விண்ணுக்குச் செல்கிறது. இந்தப் பக்டீரியா மீது உருவாகும் ஐஸ் பல்கிப் பெருகுகிறது. இந்த ஐஸ் கட்டிகள் மழை மேகங்களாக மாறுகின் றன. சில குறிப்பிட்ட வெப்ப நிலை யில் மழையாக பொழிகின்றன. இந்த பக்டீரியாக்கள் உலகம் முழுவ தும் எல்லா பகுதிகளிலும் காணப் படுகின்றன.

மழை பெய்யும் காலங்களில் தான் இந்த பக்டீரியாக்கள் பெருகி வளர் கின்றன. இவை 83 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலைக்கு உட்பட்ட இடத்தில் மட்டுமே வளர முடியும். தற்போது உலகம் வெப்பமயமாகி வருவதால் இந்த பக்டீரியாக்கள் அழியும் நிலை கூட ஏற்படலாம். எனவே இந்த பக்டீரியாக்களை செயற்கை முறையில் உருவாக்குவது குறித்தும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

மழையையோ அல்லது பனியையோ சாதாரண மழைமானி மூலம் அளவிடலாம். சாதாரண மழை மானி கண்ணாடி அல்லது உலோகத்தால் ஆன இரண்டு நீளுருளைகளையும் ஒரு புனலையும் கொண்டது. உட்புற உருளையும் மேல் உள்ள புனல் மழை நீர் அந்த உருளைக்குள் செல்லுமாறு அமைக்கப்பட்டிருக்கும் உட்புற உருளை நிறைந்தபின் மழை நீர் மேற்புற உருளையில் சேகரிக்கப்படும்.

பொதுவாக ஒவ்வொரு 24 மணித்தியாலத்திற்கும் மழை அளவிடப்படும். எனவே மழையை அளவிடும் முன்னர் நேரத்தை குறித்துக்கொள்வது அவசியம். மழைமானியை ஒரு பொதுவான இடர்பாடுகள் இல்லாத இடத்தில் மழை பெய்யும் நேரத்திற்கு பிறகு மானியில் உள்ள நீரின் அளவை மில்லிமீட்டர் அளவில் எடுக்கவேண்டும். மழை ஒரு திரவம் என்பதால் மில்லிமீட்டர் என்ற அளவைவிட லீட்டர் என்ற அளவில் மாற்றினால் தெளிவாக இருக்கும்.

ஒரு மில்லிமீட்டர் மழை -அளவு என்பது ஒரு லீட்டர், ஒரு சதுர மீட்டருக்கு சமம்.

எனவே, 10 சீசீ மழை என்று பதிவானால் அதை 10 லீட்டர் சதுர மீட்டர் என்று எடுத்துக்கொள்ளவும். ஒரு ஊரில் எவ்வளவு மழை பெய்துள்ளது என கணக்கிட அந்த ஊரின் பரப்பளவு (சதுர மீட்டரில்) தெரிந்திருக்க வேண்டும்.

மழையின் வகைகள் பின்வருமாறு:-

ஆலி - மழை துளி

சோனை - விடா மழை

தூறல் - சிறிய மழை

சாரல் - மலையில் பட்டு விழும் மழை

அடை மழை:

ஐப்பசி மாதம் அடை மழை பெய்யும், அடைச்சு கதவு திறக்காதபடி அடை மழை பெய்யும் கார்த்திகை மாதம் கன மழை பெய்யும் என்று பழமொழிகள் கூறுகின்றன.

அந்தக் காலத்தில் நாள் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்திருக்கிறது. இப்படிப் பெய்யும் மழையைத்தான் அடை மழை அல்லது அடைத்த கதவு திறக்காத மழை என்று கூறுகின்றார்கள். கனமழை, அளவில் பெரிய துளிகள் உள்ள மழை.

மாரி:

மாரி அல்லது காரியம் இல்லை என்று கூறுகின்றார்கள்.

மாரி என்ற சொல் மழையைக் குறிக்கிறது. மாரி என்ற சொல்லை காளி என்ற தெய்வத்தைக் குறிக்கவும் பயன்படுத்துகின்றார்கள். மழையையே தெய்வமாகப் பாவித்த ஆதி மனிதனின் அடையாளமாகத்தான் மாரி என்ற சொல் மழையையும் கடவுளையும் குறிக்கிறது.

ஆலங்கட்டி மழை:

பனி கட்டி கட்டியாக மழையுடனோ அல்லது தனியாகவோ விழும் மழை பனிமழை- பனி மழையாகப் பொழி வது இது பொதுவாக இமயமலை போன்ற சிகரங்களில் காணப்படும்.

ஆழிமழை:

ஆழி என்றால் கடல். இது கடலில் பொழியும் இடைவிடாத மா மழையை குறிக்கும். துளி- மழையில் லாவிடில் துன்பமுறும் உலகத்தைப் போல் அருள் இல்லாத அரசினால் குடிமக்கள் தொல்லைப்படுவார்கள். இதில் மழையை துளி என்று கூறப் பட்டுள்ளது.

துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன் அளியின்மை வாழும் உயிர்க்கு (திருக்குறள்)

புயல்:

புயல் என்பது காற்றுடன் வரும் மழையைக் குறிக்கும். இதை குறை வில்லாத மழை என்று வள்ளுவர் தருகின்றார். ஏரின் ஊழாஅர் உழவர் புயல் என்னும் வாரி வளங்குன்றிக் கால் (குறள்) மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உழவுத் தொழில் குன்றி விடும்.

அமில மழை அல்லது காடிநீர் மழை அல்லது வேறு வடிவில் காடி நீர் வீழ்தல் என்பது வழமைக்கு மாறான அமிலத் தன்மை கொண்ட மழை அல்லது வேறுவிதமான வீழ்படிதல் ஆகும்.

இது தாவரங்கள் நீர்வாழ் விலங்கினங்கள் உள்கட்டுமானம் என்பவற்றின் மீது தீங்கு விளைவிக்கக் கூடிய தாக்கத்தை உண்டாக்குகிறது. இது பெரும்பாலும் மனித நடவடிக்கை களால் வெளிப்படும் கந்தகம், நைதரசன் ஆகியவற்றைக் கொண்ட சேர்வைகள் வளிமண்டலத்துடன் தாக்கமுற்று அமிலங்களை உருவாக் கின்றன. அண்மைக் காலங்களில் பல நாடுகள் இவ்வாறான சேர்வைகள் வெளிவிடுவதைத் தடுப்பதற்கான பல சட்டங்களை அறிமுகம் செய் துள்ளன.

ஆலங்கட்டி மழை வானத்திலிருந்து விழும் திடநிலைப் பொழிவாகும். பந்துகளாகவோ ஒழுங்கற்ற உருண்டை களாகவோ உள்ள பனிக்கட்டிகளான இவற்றை ஆலங்கட்டி என்கிறோம்.

பெரும்பான்மையான இடிமழைகளில் ஆலங்கட்டிகள் அடங்கியிருக்கும் இது இடி மேகங்களில் உருவாகியிருக்கும். இது இடி மேகங்களில் உருவாகின்றது. இவ்வாறு உருவாக சூடான காற்று இடி மேகங்களுடன் விரைவாக சூடான காற்று இடி மேகங்களுடன் விரைவாக மேலெழுகையும் குறைந்த உயரத்திலேயே குளிர்விக்கும் தன்மையும் தேவையாகும். இவை அடிக்கடி நிலப்பகுதிகளின் உள்புறங்களில் புவியின் இடைப்பட்ட உயரங்களிலும் வெப்ப மண்டலங்களில் உயர்ந்த உயரங்களிலும் ஏற்படுகின்றன.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி