ஹிஜ்ரி வருடம் 1434 ஜுமாதல் ஊலா மாதம் பிறை 09
நந்தன வருடம் பங்குனி மாதம் 09ம் திகதி வெள்ளிக்கிழமை
FRIDAYDAY ,MARCH,22, 2013
வரு. 81 இல. 70
 

சூழலைப் பாதுகாத்தல் தொடர்பான இஸ்லாமிய கண்ணோட்டம்

சூழலைப் பாதுகாத்தல் தொடர்பான இஸ்லாமிய கண்ணோட்டம்

நீர், காற்று மற்றும் கனியவளங்கள் முதலிய சூழலில் காணப் படும் இயற்கை வளங்களை வீணாக்குவதும் மாசுபடுத்துவதும் பல்வேறு சுகாதாரப் பிரச்சினைகளையும் சூழலியல் பிரச்சினைகளை யும் உருவாக்கி மக்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கின்றன. இதனால் பல்வேறு நோய்கள் ஏற்பட்டு மக்களை அழி வுக்குள்ளாக்குகின்றன. மக்கள் இதன் மூலம் பல்வேறு துன் பங்களுக்கும் ஆளாகின்றனர். இவ்வாறு, மக்களை அநியாயமா கத் துன்பங்களுக்கு ஆளாக்குவது மிகப் பெரும் பாவமாகும் என அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது.

‘முஃமினான ஆண்களையும் முஃமினான பெண்களையும் அவர்கள் செய்யாதவற்றுக்காக துன்பத்துக்குள்ளாக்குவோர் தெளிவான பாவத்தையும் பழியையும் தம்மீது சுமந்து கொண்டனர்.

(அல்குர்ஆன் 33:58)

மனிதர்கள் தம்மைத்தாமே தமது தீய செயற்பாடுகள் மூலம் அழிவுக்குள்ளாக்கிக் கொள்வதனையும் இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கின்றது.

‘உங்களை நீங்களே அழிவுக்குள்ளாக்கிக் கொள்ளாதீர்கள்.’

(அல்குர்ஆன் 2:195)

இயற்கை வளங்களை மாசுபடுத்துவதை நபியவர்கள் தடுத்தமைக்கு பல ஹதீஸ்கள் ஆதாரங்களாக உள்ளன. உதாரணமாக பின்வரும் ஹதீஸினைக் குறிப்பிட முடியும்.

‘தேங்கி நிற்கும் நீர் நிலையில் சிறுநீர் கழிப்பதை நபிய வர்கள் தடுத்தார்கள்’ (ஆதாரம் : முஸ்லிம்)

இது, மலம் கழித்தல் மற்றும் வேறு வழிகளில் நீர் நிலைகளை மாசுபடுத்தல் முதலியனவற்றுக்கும் பொருந்தும். தேங்கி நிற்கக் கூடிய நீர்நிலையில் சிறுநீர் கழித்தல் போன்ற சிறிய அளவிலான கழிவகற்றல் நடவடிக்கையால் கூட மாசுபட்டுவிடும் என்பதனால்தான் நபியவர்கள் அப்படி சிறுநீர் கழிப்பதை உதாரணமாகக் குறிப்பிட்டுக் கூறினார்கள்.

தற்காலத்தில் பெரும் தொழிற்சாலைகளின் கழிவுகள் பெரும் நீர் நிலைகளை மட்டுமன்றி வளிமண்டலத்தையும் மாசுபடுத்தி விடுகின்றன. இதனால் அவற்றில் வாழும் உயிர்ப்பிராணிகள் அழிவுக்குள்ளாகுவது மட்டுமன்றி மனிதனும் பாதிக்கப்படுகின்றான். சூழல் சமநிலைகளும் இதனால் குழம்புகின்றன. எனவே மேலுள்ள ஹதீஸின் அடிப்படையில் இவை யாவும் இஸ்லாமிய ஷரீஅத்தில் முற்றாகத் தடைசெய்யப்படுகின்றன என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

எனவே, கைத்தொழிற்சாலைகளை நிறுவுபவர்களும் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய கழிவுகளை வெளியேற்றும் தொழில் களைச் செய்பவர்களும் அவற்றை எவ்வாறு பாத கமற்ற வழிகளில் மேற்கொள்ளமுடியும் என்தற்கான வழி காட்டல்களை உரிய தரப்புக்களிடம் பெற்று அதற்கேற்பச் செயற்படுவது கடமை என் பதை உணர்ந்து கொண்டு செய ற்பட வேண்டும். இது ஒரு சாதாரண விடயமல்ல. எமது மார்க்கம் வலியுறுத்தும் முக்கிய மான சமூகக் கடமை என் பதை உணர்ந்து செயற்பட முன்வரு வோம். இதை மீறும் போது பெரும் பாவங்கள் செய்தவர்களின் பட்டியலில் நாம் சேர்க்கப்பட்டு இம்மை, மறுமைத் தண் டனைக்காளாக்கப்படுவோம் என்பதை உணர்ந்து கொள்வோம்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி