ஹிஜ்ரி வருடம் 1434 ஜுமாதல் ஊலா மாதம் பிறை 09
நந்தன வருடம் பங்குனி மாதம் 09ம் திகதி வெள்ளிக்கிழமை
FRIDAYDAY ,MARCH,22, 2013
வரு. 81 இல. 70
 

இஸ்லாத்தின் பார்வையில் இபாதத்

இஸ்லாத்தின் பார்வையில் இபாதத்

இஸ்லாத்தை தவறாக எடைபோட்ட சிலர் திருமறையை சரியாக விளங்காது அதன் ஆழ மான அர்த்தங்களை ஆராய்ந்து பார்க்காது 'இபா தத்' எனும் பதத்தையும் தவறாகவே விளங்கியுள் ளனர். அவர்கள் இபாதத் இறைவனுக்கு வணக்கம் புரிதல் எனும் பதத்துக்குரிய வரைவிலக்கணத்தை சில முக்கியமான கடமைக்குள் மட்டும் வரையறுத்துவிட்டனர். இதன் அடிப்படையில் இவர்கள் இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளையும் விளங்கி அதனை செயல்படுத்துவதில் மட்டுமே வாழ்வின் முழு நோக்கமாகக் கருதி அவற்றைச் செவ்வனே நிறைவேற்றுவதை மட்டும் இறை வணக்கமாக இபாதத்தாக கருதி விட்டனர்.

இவ்வாறு விளங்கிக் கொண்டவர்கள் இபாதத்தாக கருதும் இஸ்லாத்தின் ஐங்கடமைகளினதும் சரியான பெறுபேறு அதற்கு வெளியேயுள்ள ஏனைய வாழ்வின் சகல துறைகளிலும் இறை கட்டளைக்கு அடிபணிந்து வாழ்வதில் தான் தங்கியுள்ளதென்பதை உணரத் தவறிவிட்டனர். 'இபாதத்' எனும் பதம் ஆழ்ந்த அறிவுபூர்வமான அர்த்தங்களை தன்னகத்தே கொண்டது. இஸ்லாமிய கண்ணோட்டத்தில் இபாதத் எனும் பதத்தின் மூலம் இஸ்லாம் எவற்றை எல்லாம் கருதுகிறது என்பதை சுருக்கமாக கவனிப்போம்.

மனிதன் தனக்காக செய்யும் கடமைகள் யாவும் இபாதத்தாகவே அமைய வேண்டும் என்றே இறைவன் விரும்புகின்றான். இதனையே 'நான் மனிதனையும் ஜின்னைவும் என்னை வணங்கவே அன்றி (எனக்கு இபாதத் செய்யவே அன்றி) படைக்கவில்லை' என்று அல்-குர்ஆனில் கூறுகிறான். ஆக, மனிதனைப் படைத்த நோக்கமே இறைவனை வணங்குவதற்காகவும் மனிதர்கள் இறைவனுக்கு மட்டுமே பணிந்து வாழ வேண்டுமென்பதை கீழ்வருமாறு அல்குர்ஆன் வசனம் பிரஸ்தாபிக்கிறது. 'இறைவனையே அன்றி நீங்கள் வேறு யாரையும் வணங்க வேண்டாம்' 'எப்படி தனக்கு மனிதன் மரியாதை தர வேண்டுமென வல்ல அல்லாஹ் எதிர்பார்க்கிறானோ அந்த வல்லோன் வகுத்த வழிகளையே இறைவனின் அடிமைகளாகிய நாம் தெரிவு செய்து கொள்ள வேண்டும்.

 ஒரு சில வணக்கங்களை மட்டும் ஒருசில நேரங்களில் மாத்திரம் நிறைவேற்றி விட்டால் இறைவனுக்கு மரியாதை செய்ததாக கருத முடியாது. மாறாக மனிதனை அன்றாட வாழ்வில் இஸ்லாம் பின்னிப் பிரதிபலிக்க வேண்டும். அன்றாடம் செய்யும் வேலைகளையும் இபாதத்தாக மாற்ற முடியும். இதனையே ரஸ¤ல் (ஸல்) அவர்கள் 'நிச்சயமாக அமல்களுக்குரிய கூலி எண்ணங்களைப் பொறுத்தே கொடுக்கப்படுகிறது எனவும் ஒவ்வொரு மனிதனும் தான் செய்யும் செயல்களுக்கு எவ்வெண்ணத்தை மனதிற் கொள்கிறானோ அவ்வெண்ணத்திற்குத் தக்கவாறே அவனுக்குக் கூலியும் கிடைக்கும்' எனப் பகர்ந்தார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி