ஹிஜ்ரி வருடம் 1432 துல்ஹஜ் பிறை 08
கர வருடம் ஐப்பசி மாதம் 19ம் திகதி சனிக்கிழமை
SATUREDAY, NOVEMBER 05, 2011
வரு. 79 இல. 263
 

2 ஜி ஸ்பெக்டரம் குறித்த விவரங்களை வெளியிட முடியாது

2 ஜி ஸ்பெக்டரம் குறித்த விவரங்களை வெளியிட முடியாது

பிரதமர் அலுவலகம் தெரிவிப்பு

2 ஜி விவகாரம் குறித்த தகவல்களை தற்போது அளிப்பது நாடாளுமன்ற உரிமையை மீறும் செயல். எனவே இதுபற்றிய விவரங்களை தெரிவிக்க முடியாது என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் விற்கப்பட்டது தொடர்பாக பிரதமர் அலுவலகத்துக்கும், சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்கும் இடையே நடந்த தகவல் பரிமாற்றங்கள் அடங்கிய விவரங்களை அளிக்கும்படி விவேக் கார்க் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் இது குறித்த விவரங்களை தெரிவிக்க முடியாது என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இது குறித்து பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ள பதிலில் கூறப்பட்டுள்ளதாவது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழு, நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆகியவை விசாரித்து வருகின்றன.

இக்குழுக்களின் ஆய்வு அறிக்கை நாடாளுமன்றில் இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை இது போன்ற சூழ்நிலையில் 2 ஜி விவகாரம் பற்றிய விவரங்களை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் வெளியிட முடியாது அவ்வாறு வெளியிட்டால் அது நாடாளுமன்ற உரிமையை மீறிய செயலாகும்.

இது குறித்து விவேக் கார்க் கூறுகை யில்,

பிரதமர் அலுவலகத்தின் இந்த பதில் வெளிப்படையான சட்ட நடவடிக்கைகளுக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது” என்றார். விவேக் கார்க் ஏற்கனவே தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் தான் நிதி அமைச்சும், பிரதமர் அலுவலகத்துக்கு எழுதிய கடிதம் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத் தியது. இந்நிலையில் தற்போது 2ஜி பற்றிய விவரங்களை தெரிவிக்க முடியாது என பிரதமர் அலுவலகம் தெரிவித் துள்ளது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி