ஹிஜ்ரி வருடம் 1432 துல்ஹஜ் பிறை 08
கர வருடம் ஐப்பசி மாதம் 19ம் திகதி சனிக்கிழமை
SATUREDAY, NOVEMBER 05, 2011
வரு. 79 இல. 263
 

பெட்ரோல் விலை உயர்வுக்கு பா.ஜனதா, இடதுசாரி கட்சிகள் கண்டனம்

பெட்ரோல் விலை உயர்வுக்கு பா.ஜனதா, இடதுசாரி கட்சிகள் கண்டனம்

பெட்ரோல் விலை உயர்வுக்கு பா.ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடி கூறுகையில்;

பெட்ரோல் விலை உயர்வு ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் மற்றொரு நள்ளிரவு வஞ்சகம். பொருளாதாரவாதியான பிரதமர், நாட்டையே வெட்கப்பட வைத்து விட்டார்.

அரசின் ஆணவத்தை நசுக்க இதுவே உரிய நேரம் என்றார். மார்க்சிஸ்ட் கம்யனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நிலோத்பல் பாசு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் டி.ராஜா ஆகியோரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

விலை உயர்வை வாபஸ் பெறுமாறு கோரியுள்ள அவர்கள், விலை உயர்வை எதிர்த்து நாட்டின் மூலை முடுக்கெல்லாம் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளனர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி