ஹிஜ்ரி வருடம் 1432 துல்ஹஜ் பிறை 08
கர வருடம் ஐப்பசி மாதம் 19ம் திகதி சனிக்கிழமை
SATUREDAY, NOVEMBER 05, 2011
வரு. 79 இல. 263
 

ஜெயலலிதாவுக்கு தலைவர்கள் கண்டனம்

தி.மு.க.உறவில் பாதிப்பில்லை காங்கிரஸ் கருத்து

கனிமொழிக்கு பிணை மறுக்கப்பட்டதால் தி.மு.க. காங்கிரஸ் உறவில் பாதிப்பு ஏற்படாது என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. கட்சியின் செய்தி தொடர்பாளர் மனிஷ் திவாரி கூறியதாவது:-

கனிமொழிக்கு பிணை மறுக்கப்பட்டுள்ளதால், இதுவே இறுதி முடிவு என்று கருதத் தேவையில்லை. மேல் முறையீடு செய்வதற்கு வழிகள் உள்ளன. நீதிமன்றில் வேறு கோணத்தில் வழக்கு பார்க்கப்படலாம். ஸ்பெக்ட்ரம் பிரச்சினை உயர் நீதிமன்றில் சி.பி.ஐ.யால் விசாரிக்கப்படும் விவகாரம் ஆகும். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு சிறப்பு நீதிமன்றில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த தீர்ப்பால் தி.மு.க. காங்கிரஸ் உறவில் பாதிப்பு ஏற்படாது. குறிப்பிட்ட ஒரு முடிவால் இரண்டு அரசியல் கட்சிகளுக்கு இடையே உறவு வலுப்படவோ அல்லது பாதிப்பு ஏற்படவோ வாய்ப்பு இல்லை.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி