ஹிஜ்ரி வருடம் 1432 துல்கஃதா பிறை 02
கர வருடம் புரட்டாதி மாதம் 13ம் திகதி வெள்ளிக்கிழமை
FRIDAY, SEPTEMBER 30, 2011
வரு. 79 இல. 231
 

முதல் வெற்றி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்

சம்பியன் லீக் கிரிக்கெட்:

முதல் வெற்றி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்

சம்பியன்ஸ் லீக் போட்டியில் கேப் கோப்ராஸ¤க்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது சென்னை சூப்பர் கிங்ஸ்.

இதன் மூலம் இந்தத் தொடரில் முதல் வெற்றியை ருசித்தது சூப்பர் கிங்ஸ். முதலில் ஆடியகேப் கோப்ராஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 145 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் ஆடிய சென்னை 19.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 146 ஓட்டங்கள் எடுத்து வெற்றி கண்டது.

சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நாணயச்சுழற்சி வென்ற துடுப்பெடுத்தாடிய கேப் கோப்ராஸ் அணியில் ரிச்சர்ட் லெவி 6 ஓட்டங்களில் அஸ்வின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். 14 பந்துகளைச் சந்தித்த கிப்ஸ் 3 பவுண்டரிகளுடன் 18 ஓட்டங்கள் எடுத்தார். பின்னர் வந்த டி. ஜே. விலாஸ் 19 பந்துகளில் 1 சிக்ஸர், 1பவுண்டரியுடன் 18 ஓட்டங்கள் எடுத்தார்.

இதன்பிறகு ஜோடி சேர்ந்த ஓவைஸ்ஷாவும், டுமினியும் சற்று அதிரடியாக விளையாட அந்த அணியின் ஸ்கோர் உயர்ந்தது. 24 பந்துகளைச் சந்தித்த டுமினி 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 29 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார் ஓவைஸ்ஷா 38 பந்துகளில் 1 சிக்ஸர், 3பவுண்டரிகளுடன் 45 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார்.

அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 145 ஓட்டங்கள் குவித்தது. சென்னை தரப்பில் மோர்கல், பொலிங்கர், பிராவோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பிராவோ அதிரடி: பின்னர் ஆடிய சென்னை அணியில் விஜய் 14, ஹசி 29, பத்ரிநாத் 2, சாஹா 6, ரெய்னா 20 ஓட்டங்களுக்கு வெளியேற 5 விக்கெட் இழப்புக்கு 77 ஓட்டங்கள் என்ற நிலைக்கு தள்ளப்பட்டது சூப்பர் கிங்ஸ். கேப்டன் தோனி 17 பந்துகளில் 15 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார். மறுமுனையில் பிராவோ அதிரடியில் இறங்கினார்.

சென்னை அணி வெற்றிபெற கடைசி 2 ஓவர்களில் 23 ஓட்டங்கள் தேவைப்பட்ட போது, ஸ்டெயின் வீசிய 19 வது ஓவரை எதிர்கொண்ட பிராவோ அந்த ஓவரில் ஒரு சிக்ஸரையும், 2 பவுண்டரிகளையும் விளாசினார். இதனால் சென்னையின் வெற்றி எளிதானது 19.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 146 ஓட்டங்கள் எடுத்து வெற்றி கண்டது சென்னை சூப்பர் கிங்ஸ். பிராவோ 25 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 46 ஓட்டங்களும், மோர்கல் 6 ஓட்டங்களும் எடுத்து களத்தில் இருந்தனர். கேப் கோப்ராஜ் தரப்பில் டுமினி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பிராவோ ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி