ஹிஜ்ரி வருடம் 1432 துல்கஃதா பிறை 02
கர வருடம் புரட்டாதி மாதம் 13ம் திகதி வெள்ளிக்கிழமை
FRIDAY, SEPTEMBER 30, 2011
வரு. 79 இல. 231

சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதுகாக்க ஜனாதிபதி உரிய நடவடிக்கை எடுத்து வருகிறார்

சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதுகாக்க ஜனாதிபதி உரிய நடவடிக்கை எடுத்து வருகிறார்

பலஸ்தீனிய மக்களின் தன்னிகரற்ற ஓர் ஆதரவாளராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இருந்து வருகிறார். அரசாங்கங்கள் மாறினாலும் கடந்த 35 ஆண்டுகளுக்கும் கூடுதலாக பலஸ்தீனிய மக்களுக்கு மேற்கத்திய ஏகாதிபத்தியவாதிகளின் செல்லப்பிள்ளைகளாக இருந்து கொடுமைப்படுத்தி வரும் இஸ்ரேலிய அரசாங்கத்திடமிருந்து விடுதலைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற போராட்டத்தை இலங் கையிலும், உலக அரங்கிலும், ஐக்கிய நாடுகள் அமைப்பிலும் தைரியத் துடன் முன்னெடுத்து வரும் ஒரு உலகத் தலைவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இருந்து வருகிறார்.

யஹ¥திகள் பலஸ்தீனிய மக்களின் பொன்னான பூமியை மேற்கத்திய வல் லரசுகளின் உறுதுணையுடன் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னர் அப கரித்து, அங்கு இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கி பலஸ்தீனிய மக்க ளின் மனித உரிமைகளை பறித்து அவர்களை தங்களுடைய தாய்நாட் டிலேயே உரிமையற்ற இரண்டாம் தர பிரஜைகளாக நடத்தி வருவதைப் பார்த்து 70ம் ஆண்டு தசாப்தத்தின் ஆரம்பத்தில் மனம் நொந்து போன இளம் அரசியல்வாதியாகவும், 1970ம் ஆண்டு பாராளுமன்றத்தின் வய தில் குறைந்த அங்கத்தவருமாக விளங்கிய மஹிந்த ராஜபக்ஷ அவர் கள், பலஸ்தீனிய மக்களின் உரிமைப் போராட்டத்திற்கு எங்கள் நாட் டில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் தலைமைத்துவம் அளிக்கும் மகத் தான பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

அன்று இலங்கையில் பலஸ்தீனிய மக்களின் அரசியல் விடுதலைக்காக ஏற் படுத்தப்பட்ட அமைப்புக்கு தலைமைதாங்க அன்றைய அரசாங்கத்தில் அமைச்சர் பதவிகளை வகித்தவர்கள் துணிச்சலுடன் முன்வர தயக்கம் காட்டினார்கள். அவ்விதம் பலஸ்தீனிய மக்களுக்காக குரல் கொடுத் தால் தாங்கள் அமெரிக்கா போன்ற மேற்கத்திய வல்லரசுகளின் கோபத் திற்கு இலக்காக வேண்டியிருக்குமென்று அன்றைய அரசாங்கத் தலை வர்கள் அஞ்சினார்கள்.

அஞ்சா நெஞ்சமும் உலகில் எந்தப் பகுதியில் இருந்தாலும் துன்பப்படும் மக்களுக்காக சாதி, மத, பிரதேச பேதமின்றி ஆதரவளிக்கும் கருணை உள்ளம் படைத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அன்று ஓர் இளைஞனாக இருந்த போதே பலஸ்தீனிய மக்களுக்காக குரல்கொடுத் தார்.

இது பற்றி விளக்கமளித்த பாராளுமன்ற உறுப்பினரான அல்ஹாஜ் ஏ.எச். எம். அஸ்வர் தான் ஜனாதிபதியுடன் பல வெளிநாடுகளுக்கு பயணித் திருப்ப தாகவும், அவர் அரபு நாடுகளுக்கும், இஸ்லாமிய நாடுகளுக் கும் சென்றிருந்த போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது அரபு நாடுகளினதும், இஸ்லாமிய நாடுகளினதும் தலைவர்கள் அவரை தங்கள் உடன்பிறவா சகோதரனைப் போன்று அன்புடன் அரவணைத்து தங்கள் நட்பை வெளிப்படுத்தியதை பார்த்து நான் பெருமிதம் அடை ந்தேன் என்று கூறினார்.

ஒரு தடவை ஈரான் சென்றிருந்த போது அன்று ஈரானிய ஜனாதிபதியாக விளங்கிய ஆயதுல்லாஹ் கமெய்னி எங்கள் ஜனாதிபதியைப் பார்த்து உங்களைப் போன்ற பலஸ்தீனிய மக்களுக்காக குரல்கொடுக்கும் ஒரு வெளிநாட்டுத் தலைவரை நான் சந்தித்ததே இல்லை.

நீங்கள் இஸ்லா மிய மார்க்கத்தை சார்ந்தவராக இல்லாதிருந்தாலும், பலஸ்தீனிய மக்க ளின் மீது இவ்வளவு அன்பும், அனுதாபமும் செலுத்தி, அவர்களுக்காக ஜக்கிய நாடுகள் பேரவையில் கூட குரலெழுப்பியமை ஒரு பாராட்டுக் குரிய விடயமென்று ஆயதுல்லாஹ் கமெய்னி ஜனாதிபதி அவர்களி டம் தெரிவித்த போது, நான் அவருக்கு அருகில் இருந்தேன் என்று அல்ஹாஜ் அஸ்வர் கூறினார்.

ஜனாதிபதி அவர்கள் சமீபத்தில் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தில் பலஸ்தீ னிய மக்களுக்கென தனி நாடொன்றை பெற்றுக்கொடுக்க வேண்டு மென்றும், அவர்களின் பூமியில் இருந்து வெளிநாட்டு ஆக்கிரமிப்பா ளர்கள் வெளியேற வேண்டுமென்றும் வலியுறுத்திப் பேசினார்.

உரையை முடித்து தனது ஆசனத்திற்கு ஜனாதிபதி திரும்பிக் கொண்டிருந்த போது முதலில் ஜனாதிபதி அவர்களுக்கு கைலாகு கொடுத்து பாராட்டியவர் பலஸ்தீனிய ஜனாதிபதி மஹ்மூட் அப்பாஸ் ஆகும். உங்களைப் போன்ற இன்னும் பலர் எங்களுக்காக குரல் கொடுத்தால் நிச்சியம் பல ஸ்தீனிய மக்களின் குறைகள் தீர்ந்து, அவர்களுக்கு தனியான ஒரு நாடு கிடைக்குமென்று பலஸ்தீனிய ஜனாதிபதி பாராட்டுத் தெரிவித்தார்.

ஜனாதிபதி அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக பலஸ்தீனத்தில் ரம ல்லா நகரில் ஒரு வீதிக்கு மஹிந்த ராஜபக்ஷ வீதியென்று பெயர் சூட் டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்விதம் எந்த சந்தர்ப்பத்திலும் சாதி, மத பேதமின்றி வெளிநாட்டில் மட் டுமல்ல உள்நாட்டிலும் கஷ்டப்படும் ஏழை மக்களுக்கு ஜனாதிபதி அவர்கள் என்றுமே உதவி செய்ய தயக்கம் காட்டுவதில்லை.

கொழும் பில் இருக்கும் சேரி வீடுகளிலும் தோட்டங்களிலும் உள்ள சிறிய வீடு களிலும் குடியிருக்கும் முஸ்லிம் மற்றும் தமிழ் மக்கள் வெளியேற்றப் பட்டு அவர்கள் கொழும்புக்கு வெளியில் ஏதாவது ஒரு ஒதுக்குப்புறத் தில் குடியமர்த்தப்படுவார்கள் என்று ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பு மாநகரசபைத் தேர்தலில் வெற்றியடைவதற்காக போலி வாக்குறுதிகளை பிரசாரங்களை கூறி வருகின்றதை அரசியல் ரீதியில் நல்ல அனுபமிக்க கொழும்பில் உள்ள முஸ்லிம் மற்றும் தமிழ் மக்கள் நம்பிவிடலாகாது என்று ஜனாதிபதி அவர்கள் உறுதியளித்துள்ளார்.

நான் ஜனாதிபதியாக இருக்கும் வரை கொழும்பு வாழ் சிறுபான்மை மக்க ளுக்கு எவ்வித அநீதியும் இழைக்கப்பட மாட்டாது. அவர்களுக்கு 35 ஆயிரம் மாடி வீடுகளை கட்டி இன்று ஏழ்மையில், வசதியின்றி சேரி வீடுகளில் வாழும் மக்களை வசதியாக வாழ வைப்பதற்கு நான் நடவடி க்கை எடுப்பேன். ஏற்கனவே இந்த வீடுகள் வேகமாக நிர்மாணிக்கப் படுகின்றன என்றும் ஜனாதிபதி அவர்கள் கூறியிருக்கிறார்.

கொழும்பு மாநகரை ஒரு நவீன நகரமாக மாற்றும் அதே வேளையில் கொழும்பு வாழ் மக்கள் அனைவருக்கும் ஒரு சிறந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க தயங்காது என்பதனை நாம் ஞாபகப்படுத்த விரும்புகிறோம்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி