ஹிஜ்ரி வருடம் 1432 ரஜப் பிறை 18
கர வருடம் ஆனி மாதம் 06ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, JUNE 21, 2011
வரு. 79 இல. 145
 
சருமப் பாதுகாப்பற்ற குளியல் ஆபத்தானது

சருமப் பாதுகாப்பற்ற குளியல் ஆபத்தானது

சருமப்பாதுகாப்பற்ற சூரியக் குளியல் ஆபத் தானது. இள வயதின ருக்கு ஆய்வாளர்கள் எச்சரிக்கை.

பிரிட்டனில் சூரியக் குளியலில் ஈடுபடும் இளவயதினர் அதற்கென சிபாரிசு செய்யப்பட்டு ள்ள நேரத்திலும் பார்க்க 12 மடங்கு அதிகமான வெய்யிலில் கிடக்கின்றனர்.

அதுவும் அதற்குரிய கிaம்கள் எதையும் பூசாமல் அது சருமத்துக்கு மிகவும் ஆபத்தானது என்று ஆய் வாளர்கள் எச்சரித்துள்ளனர். இளவயதினருள் அரைவாசிக்கும் மேற்பட் டவர்கள் எந்தவிதமான சருமப் பாதுகாப்பும் இன்றி கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் வெய்யிலில் கிடக்கின்றனர். இதை பாதுகாப்பானதாக அவர்கள் கருதுகின்றனர். ஆனால் அது ஆபத்தானது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

எந்தவிதமான சருமப் பாதுகாப்பும் இன்றி சூரிய வெளிச்சத்தில் பத்து முதல் பதி னைந்து நிமிடங்கள் வரை தான் இருக்க வேண்டும் என்பது உத்தியோக பூர்வமான சிபாரிசாகும்.

உரிய கிaம்களைப் பூசிக் கொள்ளாமல் இவ்வாறு அளவுக்கு அதிக மாக நேரடி சூரிய ஒளியில் இருப்பது வாழ்க்கையின் பிற்காலத்தில் சருமப் புற்றநோய்களை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வை நடத்தியுள்ள டீன்ஏஜ் வயதினருக்கான புற்றுநோய் நிதியமே இந்த எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.

13 வயதுக்கும் 24 வயதுக்கும் இடைப்பட்ட 600 பேர் மத்தியில் இது தொடர்பான ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இவர்களுள் மூன்றில் ஒரு பங்கு இளவய தினர் சூரியக் குளியலின் போது எவ்வித மான கிaம் களையும் பாவிப்பதில்லை. அரைவாசிக்கும் மேற்பட்டோருக்கு கிaம் களை எப்படிப் பாவிப்பது என்பது தெரியாது என்பதும் இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி