ஹிஜ்ரி வருடம் 1432 ரஜப் பிறை 18
கர வருடம் ஆனி மாதம் 06ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, JUNE 21, 2011
வரு. 79 இல. 145
 
அடையாள அட்டை இல்லாதோர் ஜுலை 13க்கு முன் விண்ணப்பிக்கலாம்

அடையாள அட்டை இல்லாதோர் ஜுலை 13க்கு முன் விண்ணப்பிக்கலாம்

தேர்தல் திணைக்களம் வேண்டுகோள்

தேசிய அடையாள அட்டையோ, ஆளடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு தேர்தல் ஆணையாளரால் அங்கீகரிக்கப்பட்டு ள்ள ஆவணங்களையோ கொண்டிராதவர்கள் ஜுலை மாதம் 13ம் திகதிக்குள் தற்காலிக அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென தேர்தல் செயலகம் நேற்று தெரிவித்தது.

தங்கள் தங்கள் பிரதேச கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர்களுக்கு விண்ணப்பித்து இத்தற்காலிக அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ளுவது அவசியம் எனவும் செயலகத்தின் அதிகாரியொருவர் கூறினார்.

234 உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தேர்தல் நடாத்தியபோது தற்காலிக அட்டைகளைப் பெற்றிருப்பவர்களும் தங்கள் தங்கள் பிரதேச கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக விண்ணப்பித்து தற்காலிக அடையாள அட்டையைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், நாட்டிலுள்ள 64 உள்ளூராட்சி மன்றங்களுக்கு எதிர்வரும் ஜுலை மாதம் 23ம் திகதி நடைபெறவிருக்கின்றது. இத்தேர்தலில் வாக்களிப்பதற்கு ஆளடையாளத்தை உறுதிப்படுத்தக் கூடிய தேசிய அடையாள அட்டையையோ அல்லது தேர்தல் ஆணையாளரினல் அங்கீகரிக்கப்பட்டுள்ள ஆளடையாளத்தை உறுதிபடுத்துக் கூடிய ஆவணங்களையோ கொண்டிராதவர்கள் கிராமசேவகர்கள் ஊடாக விண்ணப்பித்து ஜுலை 13ம் திகதிக்குள் தற்காலிக அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளுவது அவசியம்.

2009ம் ஆண்டு வாக்காளர் இடாப்பு படி 234 உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஏற்கனவே தேர்தல் நடாத்தப்பட்டன. ஆனால் எதிர்வரும் ஜுலை மாதம் 24ம் திகதி நடாத்தப்படும் தேர்தல் 2010 ஆண்டு வாக்காளர் இடாப்பு படியே நடாத்தப்படும். அதனால் 234 உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தேர்தல் நடாத்தப்பட்டபோது தற்காலிக அடையாள அட்டை பெற்றவர்களும் அவற்றை கிராம உத்தியோகத்தர்கள் ஊடாகப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி