ஹிஜ்ரி வருடம் 1432 ரஜப் பிறை 18
கர வருடம் ஆனி மாதம் 06ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, JUNE 21, 2011
வரு. 79 இல. 145
 
இலங்கையர் பற்றி அறிய லெபனான் அதிகாரியை அனுப்ப முடிவு

ஈராக்கில் உண்ணாவிரதம்:

இலங்கையர் பற்றி அறிய லெபனான் அதிகாரியை அனுப்ப முடிவு

ஈராக்கில் உண்ணா விரதமிருக்கும் இலங்கையர் தொடர்பாக நேரடியாக கண்டறிய வென லெபனானிலுள்ள இலங்கைத் தூதரக அதிகாரி அனுப்பப்பட வுள்ளார். ஈராக்கிய அரசின் அனுமதி கிடைத்ததும் அவர் அங்கு விரையவுள்ளார் என வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கிறது.

ஈராக்கில் இலங்கைக்கான தூதரகம் இல்லாத நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஈராக்கிலுள்ள இலங்கைத் தூதரகம் அகற்றப்பட்டு இரு நாடுகளுக்குமிடை யேயான இராஜதந்திர உறவுகள் அற்ற நிலையில் இலங்கையர் எவரும் ஈராக்குக்கு செல்லக்கூடாது என தடைசெய்யப்பட்டிருந்த வேளை எவருக்கும் தெரியாமல் தொடர் பாகவும் தடையை மீறிச் சென்றுள்ள இவர்கள் இவர்களின் கோரிக்கைகள் தொடர்பாகவும் தலையிட வெளிவிவகார அமைச்சுக்கோ, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுக்கோ உத்தியோக பூர்வமாக அதிகாரமில்லை.

இவர்களது கொடுப்பனவு பிரச்சினைகள் தொடர்பாக தலையிட இலங்கை வெளி விவகார அமைச்சுக்கோ, பணியகத்திற்கோ, அதிகாரம் இல்லை. எனினும் இவர்கள் எமது நாட்டின் பிரஜைகள் இவர்களை இலங்கைக்கு திரும்பி அழைத்துக்கொள்ள மட்டும் எம்மால் நடவடிக்கை எடுக்க முடியும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி