ஹிஜ்ரி வருடம் 1432 ரஜப் பிறை 18
கர வருடம் ஆனி மாதம் 06ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, JUNE 21, 2011
வரு. 79 இல. 145
 
கொஸ்கொட விபத்தில் சிறுமி துடிதுடித்து மரணம்

கொஸ்கொட விபத்தில் சிறுமி துடிதுடித்து மரணம்

பெரும் பதற்றம்: பஸ் எரிப்பு

கொஸ்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்றுக் காலை இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுமியொருவர் உயிரிழந்தார். இச்சம்பவத்தையடுத்து நேற்றுக் காலை கொஸ்கொடை பகுதியெங்கும் பெரும் களேபர மடைந்ததுடன் விபத்துக்கு காரணமான பஸ் ஊர் மக்களால் எரிக்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

அதனைத்தவிர பஸ் உரிமை யாளருக்குச் சொந்தமான ஆடைத் தொழிற் சாலை அங்கே நிறுத்தப்பட்டிருந்த மேலும் இரு பஸ்களும் பொதுமக்களால் அடித்து உடைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். விபத்தில் ஒன்பது வயதான திஸானி ஹன்சனித சொய்ஸா எனும் சிறுமியே உயிரிழந்துள்ளார். இவர் மிரிஸ்வத்த மகாவித்தியாலயத்தில் தரம் தா நான்கில் கல்வி கற்கும் மாணவியாவார்.

இவ்விபத்து நேற்றுக் காலை 7.15 மணிக்கு இடம் பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:-

கொஸ்கொடையைச் சேர்ந்த மேற்படி சிறுமி அவருடைய அண்ணணுடன் என்றும் போல நேற்று மிரிஸ்வத்த மகா வித்தியாலயத்திற்கு சைக்கிளில் சென்றுள்ளார்.

அச்சமயம் பின்னால் பஸ்ஸொன்று அதிவேகமாக வருவதனைக் கண்ட, சிறுமி யின் சகோதரன் சைக்கிளை வீதியோரமாக்க முயற்சித்த வேளை சைக்கிள் சரிந்து விழுந்துள்ளதுடன் சிறுமி வீதிக்கு அருகே சென்று விழுந்து ள்ளார். அவ்வேளை வேகமாக வந்த குறித்த பஸ் சிறுமி மீது ஏறிச் சென்றதையடுத்து சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந் துள்ளார்.

இதனையடுத்து, ஆத்திரமடைந்த ஊர்மக்கள் விபத்துக்கு காரணமான பஸ்ஸிற்கு தீ மூட்டியதுடன் ஊரகஸ்மன் சந்தியிலுள்ள பஸ் உரிமையாளருக்குச் சொந்தமான ஆடைத் தொழிற்சாலையின் மேலும் இரு வாகனங்களும் அடித்து சேதமாக்கப்பட்டுள்ளன. உயிரிழந்த சிறுமியின் சடலம் பலபிட்டிய வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர் களை அழைத்துச் செல்லும் மேற்படி பஸ்ஸே சிறுமியின் விபத்துக்கு காரண மெனவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார். பஸ் சாரதி பொலிஸாரினால் கைது செய் யப்பட்டுள்ளார். பொலிஸாரின் தலையீட்டை யடுத்து தற்போது அப்பகுதி யில் அமைதி நிலவுவதாகவும் பொலிஸ் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி