வரு. 78 இல. 249
ஹிஜ்ரி வருடம் 1431 துல்கஃதா பிறை 13
விகிர்தி வருடம் ஐப்பசி மாதம் 05ம் திகதி வெள்ளிக்கிழமை

FRIDAY, OCTOBER, 22, 2010

சின்னச் சின்ன தகவல்கள்

o பண்டைய உரோம மத சட்டங்களின்படி பறவைகளை உண்பது பாவமாக கருதப்பட்டது. பறவைகளை உண்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

o 2012ம் ஆண்டுக்குள் 17 பில்லியன் சாதனங்கள் இணையத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

o ஒரு மாதத்துக்கு 10 இலட்சத்துக்கும் அதிகமான இணையத் தளப் பெயர்கள் பதிவு செய்யப்படுகின்றன. ஆனால் அவை அனைத்தும் இயங்குகிறதா என்று கேட்டால் இல்லை என்பதே பதிலாகக் கிடைக்கும்.

o அமெரிக்காவில் திருமணமான 8 ஜோடிகளில் ஒரு ஜோடி இணையம் வழியாகச் சந்தித்து திருமணம் செய்து கொண்டவர்களாக இருப்பர்.

o சாதாரணமாக ஒரு நிமிடத்து க்கு 20 முறை கண்களை சிமிட்டுவோம். ஆனால் கணனியில் வேலை செய்யும் போது மட்டும் நிமிடத்துக்கு 7 முறை மட்டுமே கண் சிமிட்டுவோம் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

o இணையத் தளத்தில் பதாகை விளம்பரம் முதன் முறையாக 1994ம் ஆண்டு வெளியிடப்பட்டது.

o கம்ப்யூட்டரின் முதல் மவுஸ் மரத்தால் செய்யப்பட்டது. இதை 1964ம் ஆண்டு டாவ்க் ஏங்கல் பார்ட் என்பவர் வடிவமைத்தார்.

o வளிமண்டலத்துக்குள் 50 கி. மீ. தூரம் வரை புகையைக் கக்கும் திறன் கொண்டவை எரிமலைகள்.

o ஒவ்வொரு ஆண்டும், அலாஸ்காவில் 5000 நில நடுக்கங்கள் தோன்றுகின்றன.

o காட்டுத் தீ மலைச் சரிவை நோக்கிப் பரவுவதைவிட மலையின் மேற்புறமாக அதீத வேகத்தில்பரவும்.

நடனத் திருவிழா

பாரம்பரிய நடனத் திருவிழாக் களை நடத்துவதில் ஸ்பெயின் நாட்டினருக்கு நிகரில்லை. தங்கள் பண்பாடு மற்றும் நடன பாரம்பரிய த்தை வெளிப்படுத்துவதற்காக ஜுலை மாத இறுதி வாரம் முழுவ தும் ஸ்பானிஷ் ஃபிளம்பிங்கோ என்ற திருவிழாவை நடத்துகின் றனர்.

அங்குள்ள பழம்பெரும் பகுதி யாக கருதப்படும் அண்டாலூசியா வில் உள்ள அனைத்து நகரங்க ளும் அலங்கார விளக்குகள் மற் றும் கண்கவர் வண்ணத் தோரணங் களால் களைகட்டும். ஸ்பெயினின் பல பகுதிகளிலிருந்தும் அங்கு வந்து குவியும் பல்லாயிரக் கணக் கானோர் ஸ்பெயினின் பாரம்பரிய உடையணிந்து அந்நாட்டுப் பண்பா ட்டை எடுத்துக் கூறும் இசைக்கு ஏற்ப தெருக்களில் நடனமாடுவர்.

அண்டாலூசியாவின் அனைத்துப் பகுதிகளிலும் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். வயது வித்தியாசமின்றி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாரம்பரிய உடையணிந்து நடனமாடுவது இத்திருவிழாவின் சிறப்பு. தங்கள் துன்பங்கள் அனைத்தும் இந்த நடனத்தின் மூலம் தங்களைவிட்டு பிரிந்து விடுவதாக அந்நாட்டு மக்கள் உறுதியாக நம்புகின்றனர்.

பூரி ஜகந்நாதர் இரத யாத்திரை

ஒரிசா மாநிலத்தில் உள்ள ஸ்ரீ ஜகந்நாதர் கோயிலில் இரத யாத்திரை திருவிழா புகழ் பெற்றது. ஆண்டு தோறும் நடக்கும் இந்தத் தேர்த் திருவிழாவில் இலட்சக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஜகந்நாதரை வழிபடுவர். கடந்த 2000 ஆண்டுகளாக இந்தியாவில் நடந்து வரும் இந்தத் தேர்த் திருவிழாவில் ஜகந்நாதர், அவருடைய சகோதரர் பலராமர் மற்றும் சகோதரி சுபத்ரா தேவியுடன் பவனி வந்து மக்களுக்கு அருளாசி வழங்குவார்.

தொடர்ந்து 8 நாட்கள் நடக்கும் இவ்விழாவின் தொடக்க நாளன்று 14 மீற்றர் உயரமும், 16 சக்கரங்களையும் கொண்ட மிகப் பெரிய புனிதத் தேரை ஆயிரக் கணக்கானோர் வடம் பிடித்து இழுத்துச் செல்வர். 3 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள குந்தி கோயிலுக்கு தேர் கொண்டு செல்லப்பட்டு ஒரு வாரம் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படும். அதன் பின் மீண்டும் ஜகந்நாதர் கோயிலுக்கு பக்தர்களால் கொண்டுவரப்படும்.

ஒரிசா மாநிலத்தின் தலைநகருக்கு அருகே உள்ள பூரி நகரத்தின் மையப் பகுதியில் ராமகிருஷ்ண புரம் என்ற நகரை அமைத்து விஷ்ணு பக்தரான அரசர் இந்திரத்யும்னன் ஸ்ரீ ஜகந்நாதருக்கு கோயிலை கட்டியதாக வரலாறு தெரிவிக்கிறது.

கோயிலின் உச்சியில் கலசமும் அதன் மேல் சக்கரமும் அமைத்து கோயிலை தங்க ஆபரணங்களால் இம்மன்னர் அலங்கரித்திருக்கிறார். இந்த கோயிலின் முக்தி மண்டபத் தில் இருக்கும் நரசிம்மரின் மூர்த்தி பிரம்மாவால் யாகம் செய்யப்பட்டு நிர்மாணிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


.
 
» »
»