வரு. 78 இல. 232
ஹிஜ்ரி வருடம் 1431 ஷவ்வால் பிறை 25
விகிர்தி வருடம் புரட்டாதி மாதம் 18ம் திகதி திங்கட்கிழமை

MONDAY, OCTOBER, 04, 2010

அறநெறி அறிவுநொடி

அறநெறி அறிவுநொடி

கே. ஈஸ்வரலிங்கம் தலைவர் / ஸ்தாபகர் தமிழர் நற்பணி மன்றம்

8037) விரத காப்பை எப்போது கட்டிக்கொள்ள வேண்டும்? விரத ஆரம்ப நாளில்

8038) எத்தனை இழையிலான விரத காப்பை கட்டிக் கொள்ள வேண்டும்?

21 இழையிலான

8039) பெண்கள் விரதக் காப்பை எந்தக் கையில் கட்டிக் கொள்ள வேண்டும்?

இடது கையில்

8040) ஆண்கள் எந்தக் கையில் கட்டிக் கொள்ள வேண்டும்?

வலது கையில்

8041) விரதாரம்பத்தில் பவித்ரம் அணிந்து சங்கல்பம் செய்யும் போது காப்பு கட்டுவது எந்தெந்த விரதங்களின் போது என்று கூற முடியுமா?

விநாயக சஷ்டி, கந்த சஷ்டி விரதங்களின் போது

8042) இந்தக் காப்பை எப்போது அவிழ்க்க வேண்டும்?

விரதம் முடிந்த மறுநாள் அதாவது பாரணையிலன்று காலை விதுர் ஜனத்துடன் அவிழ்க்கப்பட வேண்டும்.

8043) விநாயக சஷ்டி விரதத்தை அனுஷ்டித்து இடையிலே கைவிட்டு விரதக் காப்பையும் அவிழ்த்து வீசிய பெண் யார்?

இலக்கணசுந்தரி

8044) இலக்கண சுந்தரி யாருடைய மனைவி?

விக்கிரமாதித்த மன்னனின்

8045) விரதக் காப்பை வீசியதால் இலக்கண சுந்தரிக்கு நேர்ந்தது என்ன?

அன்றிலிருந்து அநேக கஷ்டங்களை அடைந்து மன்னனால் விலக்கப்பட்டு காட்டையடைந்தாள்.

8046) அவள் வீசிய காப்பு எதன் மீது விழுந்தது?

ஒரு அவரைக் கொடி மீது

8047) அந்த அவரைக் கொடிக்கு என்ன நேர்ந்தது?

அளவின்றிச் செழித்து வளர்ந்தது.

8048) அவரைக் கொடியிற் கிடந்த விரதக் காப்பைக் கண்டெடுத்து அணிந்து கொண்டது யார்?

பணிப்பெண்ணொருத்தி

8049) இவள் இந்த விரதக் காப்பை என்ன செய்தாள்?

தான் அதனைக் கையில் கட்டி விரதம் அனுஷ்டித்தாள்

8050) அவ்விரத பலனாக அவள் பெற்ற பெறுபேறு என்ன?

மன்னனை மணந்து அரண்மனை சேர்ந்தது.

8051) காட்டில் இருந்த இலக்கணசுந்தரி என்ன செய்தாள்?

அங்கொரு மூதாட்டியின் அறிவுரைப்படி விநாயக சஷ்டி விரதத்தை மறுபடி தொடங்கி முறைப்படி நோற்றாள்.

8052) அந்நாளில் காட்டுக்கு வேட்டையாட வந்தது யார்?

விக்கரமாதித்த மன்னன்

8053) வேட்டையாட வந்த விக்கிரமாதித்தனுக்கு என்ன நடந்தது? களைப்பால் தாகம் ஏற்பட்டது

8054) விக்கிரமாதித்தன் என்ன செய்தார்?

தண்ணீருக்காக இலக்கண சுந்தரி இருந்த குடிலை நாடினார்.

8055) இலக்கண சுந்தரியைக் கண்ட விக்கிரமாதித்தன் என்ன செய்தார்?

மறுபடி அவளை மணம் செய்து அழைத்துச்சென்றான்.

8056) ஒரு பொதுத் தெய்வமாக வணங்கப்படுபவர் யார்?

விநாயகர்

8057) இவர் ஏன் ‘பொதுத் தெய்வமமாக’ கருதப்படுகிறார்?

இந்துக்கள், பெளத்தர்கள், வைஷ்ணவர்கள் என அனைவரும் வணங்குவதால்.

8058) பெளத்தர்கள் கணபதியை என்ன சொல்லி போற்றி வணங்குகிறார்கள்?

‘சித்தி தாதா’ என்று

8059) ‘கணபதி ஹிருதயம்’ என்ற ஸ்தோத்திரம் யாரால் உபதேசிக்கப்பட்டது?

புத்தபகவானால்

8060) இது யாருக்கு உபதேசிக்கப்பட்டது?

ஆனந்தர் என்பவருக்கு

8061) கணபதி ஹிருதயத்தை புத்தர் உபதேசித்தார் என்று எதில் கூறுப்பட்டுள்ளது?

நேபாள புராணக் கதையில்

8062) இந்து மதத்திற்கு மூலாதாரமாக விளங்குவது எது?

அறுவகைச் சமய வழிபாடு

8063) இதனை அருளியது யார்?

ஸ்ரீ சங்கரர்

8064) அறுவகைச் சமய வழிபாட்டில் கணபதியை முழுமுதற் கடவுளாக கொண்டு வழிபடும் சமயம் எது?

காணபத்தியம்

8065) விநாயகரின் திருவுருவம் எத்தனை என போற்றி வணங்கப்படுகிறது?

32

8066) அந்த 32 நாமங்களையும் தருக?

பால கணபதி, பக்தி கணபதி, தருண கணபதி, வீர கணபதி, சக்தி கணபதி, த்விஜ கணபதி, சித்தி கணபதி உச்சிஷ்ட கணபதி, ஷிய்ர கணபதி, விக்ன கணபதி, ஹோரம்ப கணபதி, லக்ஷ்மி கணபதி, துர்க்கா கணபதி, சங்கடஹர கணபதி, மகா கணபதி, விஜய கணபதி, நிருத்த கணபதி, ஊருத்துவ கணபதி, ஏகாட்சர கணபதி, வர கணபதி, திரயாஷர கணபதி, ஷிப்ரபிரசாத கணபதி, ஹரித்திரா கணபதி, ஏகதந்த கணபதி, சிருஷ்டி கணபதி, உத்தண்ட கணபதி, ரணமோசண கணபதி, துண்டி கணபதி, துவிமுக கணபதி, மும்முக கணபதி, சிங்க கணபதி, யோக கணபதி.


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


.
 
» »
» »
»