வரு. 78 இல. 232
ஹிஜ்ரி வருடம் 1431 ஷவ்வால் பிறை 25
விகிர்தி வருடம் புரட்டாதி மாதம் 18ம் திகதி திங்கட்கிழமை

MONDAY, OCTOBER, 04, 2010

லக்ஷபான, கெணியன் வான் கதவுகள் திறப்பு

லக்ஷபான, கெணியன் வான் கதவுகள் திறப்பு

களனி கங்கைக்கு அருகில் வாழ்வோருக்கு முன்னெச்சரிக்கை

லக்ஷபான மற்றும் கெணியன் நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் நேற்று மாலையில் திறந்து விடப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் நுவரெலியா மாவட்ட இணைப்பாளர் இரந்த ஹேமவர்தன தெரிவித்தார்.

லக்ஷபான மற்றும் கெணியன் நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டதால் களனி கங்கைக்கு இரு மரங்கிலும் வாழும் மக்களுக்கு விழிப்புடன் இருக்குமாறு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அதிகாரியொருவர் கூறினார்.

இதேவேளை பண்டாரவளை ஹப்புதளை மேல் வீதியில் வெடிப்பு ஏற்பட்டிருப்பதால் நேற்று நண்பகல் முதல் இப்பாதை தற்காலிகமாக மூடப்பட்டதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ இணைப்பாளர் எச். எம். என். பி. பண்டார கூறினார். அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் நுவரெலிய மாவட்ட இணைப்பாளர் ஹோமவர்தன மேலும் கூறுகையில் :

லக்ஷபான மற்றும் கெணியன் நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழியும் கட்டத்தை அடைந்ததால் அவற்றின் வான் கதவுகள் நேற்று மாலையில் திறந்து விடப்பட்டன லக்ஷபானவின் இரண்டு வான கதவுகள் ஒரு அடிபடி திறக்கப்பட்டுள்ளன. அதேநேரம் கெணியனின் இரு வான் கதவுகள் ஒரு அங்குலம் உயரத்திற்குத் திறக்கப்பட்டுள்ளன என்றார்.

இந்நீர்த்தேக்கங்களின் வான் கதவு திறந்து விடப்பட்டிருப்பதால் களனி கங்கையின் நீர் மட்டம் உயர்ந்து பெருக்கெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதனால் இக்கங்கைக்கு இரு மருங்கிலும் வாழும் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டுமென பிரதேச பொலிஸாரையும் அனர்த்த முகாமைத்துவ இணைப்பாளர்களையும் கொண்டு முன்னெச்சரிக்கை விடுத்திருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரியொருவர் கூறினார்.


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


.
 
» »
» »
» »
» »
» »
» »
»