வரு. 78 இல. 232
ஹிஜ்ரி வருடம் 1431 ஷவ்வால் பிறை 25
விகிர்தி வருடம் புரட்டாதி மாதம் 18ம் திகதி திங்கட்கிழமை

MONDAY, OCTOBER, 04, 2010

ஜனாதிபதி தலைமையில் இன்று திருமலையில் மீளாய்வுக் கூட்டம்

கிழக்கு அபிவிருத்திப் பணிகள்:

ஜனாதிபதி தலைமையில் இன்று
திருமலையில் மீளாய்வுக் கூட்டம்

கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்று வரும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக மீளாய்வு செய்யும் உயர் மட்டக் கூட்டம் ஒன்று இன்று திருகோணமலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறுகிறது.

திருமலை கடற்படைத் தலைமையக கேட்போர் கூடத்தில் இடம்பெறும் இக் கூட்டத்திற்கு ஆளுநர், அமைச்சர்கள், மாகாண முதலமைச்சர், மாகாண அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், திணைக்களத் தலைவர்கள், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் என பலரும் அழைக்கப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாணம் விடுவிக்கப்பட்ட பின்னர் கிழக்கு நவோதயம் என பெயரிடப்பட்டு பல்வேறு அபிவிருத்திப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. இடம்பெற்று வரும் அபிவிருத்திப் பணிகளின் முன்னேற்றம் பற்றி ஆராயும் நோக்கிலேயே இம்மாநாடு இடம்பெறுவதாக மாகாண பிரதம செயலர் வி. பி. பாலசிங்கம் தெரிவித் தார்.

கிழக்கு விடுவிக்கப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி முதன் முதலாக கிழக்கு மாகாணத்தில் உள்ள அரசியல் தலைவர்கள், உயரதிகாரிகளை ஒன்றுசேர சந்திக்கும் நிகழ்வு இதுவாகும்.

மாகாண மட்டத்தில் இடம்பெற்று வரும் அபிவிருத்திப் பணிகளை மீளாய்வு செய்யும் தொடர் மாநாடுகளை ஜனாதிபதி நடாத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது. (ரு – து)


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


.
 
» »
» »
» »
» »
» »
» »
»