வரு. 78 இல. 232
ஹிஜ்ரி வருடம் 1431 ஷவ்வால் பிறை 25
விகிர்தி வருடம் புரட்டாதி மாதம் 18ம் திகதி திங்கட்கிழமை

MONDAY, OCTOBER, 04, 2010

கிளிநொச்சி தமிழ் இலக்கிய விழா கோலாகலம்

கிளிநொச்சி தமிழ் இலக்கிய விழா கோலாகலம்

வட மாகாண பண்பாட்டலுவல்கள் கல்வி அமைச்சின் 2010 ஆம் ஆண்டிற்கான தமிழ் இலக்கிய விழா கிளிநொச்சி இந்துக் கல்லூரியில் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

2ஆம் திகதி சனிக்கிழமை காலை ஆரம்பமான இப்பெருவிழா 05ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முடிவுறும்.

இறுதிநாள் அன்று மாலை வன்னியின் பிரபல கலைஞர் மெற்றாஸ் மெயில் அரங்கில் இடம்பெறும் இறுதி நிகழ்வுகளுக்கு வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத் துறை அமைச்சின் செயலாளர் இ. இளங்கோவன் தலைமை தாங்குகிறார்.

பிரதம விருந்தினர்களாக பாரம்பரிய கைத்தொழில் அமைச்சர் கே. என். டக்ளஸ் தேவானந்தா மற்றும் வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறியும் கலந்து சிறப்பிக்கின்றார்கள்.

கெளரவ விருந்தினர்களாக வட மாகாண பிரதம செயலாளர் ஆ. சிவசாமி, கிளிநொச்சி அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

2 ஆம் திகதி சனியன்று காலை மங்களநாயகம் தம்பையா அரங்கில் பேராசிரியர் எஸ். சிவலிங்கராசா தலைமையில் ஆய்வரங்கமும் மாலை குருகுலம் பிதா அப்புச்சி கதிரவேற்பிள்ளை அரங்கி வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் என். ஸ்ரீதேவியும் தலைமை தாங்கினார்கள்.

பிரதம விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி, கேதீஸ்வரன் கலந்து கொண்டு தமிழ் அன்னைக்கு மாலை சூடி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். (ரு – து)


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


.
 
» »
» »
» »
» »
» »
» »
»