வரு. 77 இல. 245

ஹிஜ்ரி வருடம் 1430 ஷவ்வால் பிறை 25
விரோதி வருடம் புரட்டாதி மாதம் 29ம் திகதி வியாழக்கிழமை

THURSDAY, OCTOBER 15, 2009

தமிழக எம். பிக்களின் வருகை மலையக அபிவிருத்தியின் ஆரம்பம்

தமிழக எம். பிக்களின் வருகை மலையக அபிவிருத்தியின் ஆரம்பம்

தமிழக எம். பிக்களின் வருகை, மலையக அபிவிருத்தியின் நல்லதொரு ஆரம்பமாகுமென்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

மலையகத்தில் வாழ்கின்ற மக் களின் உண்மையான வாழ்வாதாரத் தைத் தமிழக பாராளுமன்ற உறுப் பினர்கள் நேரில் பார்த்துத் தெரிந்து கொண்டுள்ளதால், அந்த மக்களின் மேம்பாட்டுக்கும், பிரதேச அபிவிரு த்திக்கும் தமிழக மாநில மற்றும் இந்திய மத்திய அரசுகளின் உதவி இனிக் கூடுதலாகக் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளதாகவும், இதனை ஓர் ஆரம்பமாகக் கொண்டு எதிர் கால அபிவிருத்தி செயற்பாடுகளைத் திட்டமிட முடியுமென்றும் பிரதிய மைச்சர் சிவலிங்கம் கூறினார்.

மலையகத்தில் எதிர்காலத்தில் தோட்டத் தொழி ற்றுறை அருகி விடு மென்றும், அதனால் மாற்று ஜீவ னோபாயத் தினை மக்களுக்குத் தேடிக் கொடுக்க வேண்டுமென்றும் தமிழக பாராளுமன்ற குழுவிடம் கூறியதாக பிரதியமைச்சர் கூறினார்.

பழைமையான “லயன்” வரிசைக் குடியிருப்பு முறையை இல்லாதொ ழித்து கிராம வாழ்க்கையை ஏற்படு த்துவது தொடர்பாகவும் ஆராயப்ப ட்டுள்ளது.

மலையக அபிவிருத்தி தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தயாரித்துள்ள பத்து அம்ச திட்டத் தினை இந்திய அரசுக்கும் சமர்ப்பித் துள்ளதாக பிரதியமைச்சர் மேலும் தெரிவித்தார்.

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •