வரு. 77 இல. 238

ஹிஜ்ரி வருடம் 1430 ஷவ்வால் பிறை 17
விரோதி வருடம் புரட்டாதி மாதம் 21ம் திகதி புதன்கிழமை

WEDNESDAY, OCTOBER 07, 2009

சமபோஷ உதைபந்தாட்ட போட்டியில் ஸாஹிரா அணி சம்பியன்.

சமபோஷ உதைபந்தாட்ட போட்டியில் ஸாஹிரா அணி சம்பியன்

இலங்கை உதைபந் தாட்ட சம்மேளன மும், பாடசாலைகள் உதைபந்தாட்ட சம்மேளனமும் இணைந்து சமபோஷ நிறுவனத்தின் அனு சரணையோடு நடத்திய புத்தளம் பிராந்திய 13 வயதுக் குட்பட்ட பாடசாலை மாண வர்களுக்கிடையி லான உதைபந்தாட்டப் போட் டியில் புத்தளம் சாஹிரா தேசியக் கல்லூரி அணி சம்பியனானது.

இந்தப் போட்டித் தொடர் அண்மையில் புத்தளம் நகர சபை மைதா னத்தில் நடைபெற் றது.

புத்தளம் பிராந்திய அணிகளான புத்தளம் சாஹிரா தேசிய கல் லூரி தில்லையடி மு. ம. வி. வெட்டாளை அஸன் குத்தூஸ் மு. ம. வி, புளிச்சாக்குளம் உமர் பாறூக் மு. ம. வி, மணல் குன்று அல்-அஷ்ரக் மு. ம. வி. ஆகிய ஐந்து அணிகள் தொடரில் பங்கேற்றன.

புள்ளிகள் அடிப்படையிலான போட்டித்தொடர் என்றபடியால் ஒரு அணி தலா 04 போட்டிகளில் பங்குபற்றியதன் மூலம் மொத்தமாக 10 ஆட்டங்கள் இந்த இரு நாட்களிலும் நடைபெற்றன.

போட்டிகளின் ஆரம்ப நிகழ்வில் சமபோஷ நிறுவனத்தின் வியாபார மேம்படுத்தல் அதிகாரி குமார சமரசிங்க பிரதம அதிதியாக கலந்து கொண்டு வீரர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

நடைபெற்ற போட்டிகளின் பிரகாரம் 08 புள்ளிகளைப் பெற்று புத்தளம் சாஹிரா அணி சம்பிய னானது. இரண்டாம் இடத்தை புளிச்சாக்குளம் உமர் பாறூக் அணி பெற்றுக்கொண்டது.

இரண்டாம் இடத்தை பெறுவதற் காக உமர் பாறூக் அணியும், வெட்டாளை அஸன் குத்தூஸ் அணியும் 04 புள்ளி களை சமனாக பெற்றிருந்ததோடு போட்டிகளில் இரு அணிகளும் தலா 04 கோல் களைப் போட்டு சமநிலையில் இருந்தன.

எனினும் வாங்கிய கோல்களில் உமர் பாறூக் அணி 02 கோல்களை யும், அஸன் குத்தூஸ் அணி 04 கோல்களையும் வாங்கி இருந்ததால் குறைவாக கோல்களை வாங்கிய உமர் பாறூக் அணி 02 ஆம் இடத்து க்கான தகுதியைப் பெற்றதோடு 03 ஆம் இடத்தினை அஸன் குத்தூஸ் அணி பெற்றுக்கொண்டது.

தொடரில் சம்பியனான புத்தளம் சாஹிரா அணி மொத்தம் 14 கோல் களைப் போட்டது. இதில் 10 கோல்களை ஏ. அஸாம் என்ற மாணவன் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

போட்டிகளுக்கு நடுவர்களாக பீ. எம். ஹிஸாம், எம். என். எம். நிஸ்ரின், எஸ். எம். இனாஸ், ஏ. எச். எம். அஸ்லம் ஆகியோர் கடமையாற்றினர். (அ)

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •