வரு. 77 இல. 238

ஹிஜ்ரி வருடம் 1430 ஷவ்வால் பிறை 17
விரோதி வருடம் புரட்டாதி மாதம் 21ம் திகதி புதன்கிழமை

WEDNESDAY, OCTOBER 07, 2009

சபீனா, வீனஸ் அதிர்ச்சித் தோல்வி

சீன பகிரங்க டென்னிஸ்;

சபீனா, வீனஸ் அதிர்ச்சித் தோல்வி

சீன பகிரங்க டென்னிஸ் போட்டியில் 2வது சுற்றில் தினரா சபீனா, வீனஸ் வில்லியம்ஸ் ஆகியோர் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்கள்.

சீன பகிரங்க டென்னிஸ் போட்டி பீஜிங்கில் நடந்து வருகிறது.

இதில் நேற்று முன்தினம் நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகில் முதல் நிலை வீராங்கனை தினரா சபீனா (ரஷியா) வைல்ட் காட் வீராங்கனை ஷாங் ஷாய்பை (சீனா) சந்தித்தார்.

தினரா சபீனா தோல்வி

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஷாங் ஷாய் 7-5, 7-6, (7-5) என்ற நேர் செட்டில் தினரா சபீனாவை வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் 2ம் நிலை வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா) 6-3, 1-6, 4-6 என்ற செட் கணக்கில் ரஷ்யாவின் அனஸ்டாசியா பாவ்ஷெங்கோவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டார்.

இந்த ஆட்டத் தில் வெற்றிபெற்றால் முதல் நிலை வீராங்கனை அந்தஸ்தை பெறலாம் என்ற நிலையில் ஆடிய வீனஸ் தோல்வி கண்டதால் முதலிடத்தை பிடிக்கும் வாய்ப்பை இழந்தார்.

மற்ற ஆட்டங்களில் ஸ்வெட்லானா குஷினெட்சோவா (ரஷ்யா), அலெக்சாண்ட்ரா வோஷினியாக் (கனடா), அலோனா பான்டெரன்கோ (உக்ரைன்) ஆகியோர் வெற்றிகண்டு 3வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •