வரு. 77 இல. 238

ஹிஜ்ரி வருடம் 1430 ஷவ்வால் பிறை 17
விரோதி வருடம் புரட்டாதி மாதம் 21ம் திகதி புதன்கிழமை

WEDNESDAY, OCTOBER 07, 2009

சிறுவர் இல்லம்

சிறுவர் இல்லம்

யுத்தத்தால் இடம்பெயர்ந்து பெற்றோரையும் பாதுகாவலர்களையும் இழந்து நிற்கும்

190 சிறுவர்கள் ஜனாதிபதியின் பாரியார் சிரந்தி ராஜபக்ஷவின் மேற்பார்வையின் கீழ் வவுனியா நகரத்தில் அமைக்கப்பட்டுள்ளன ‘சிரிலிய செவன’ சிறுவர் விடுதியில்

பாதுகாப்பு பெறுகின்றார்கள்.


(படம்: வவுனியா விசேட நிருபர்)

இச்சிறுவர்களின் நலன் கருதி ஜனாதிபதியின் பாரியார் சிரந்தி ராஜபக்ஷ இடைவிடாது செயற்படுவதுடன் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறார்.

இங்கு பாடசாலைகளில் கல்வி கற்கக் கூடிய சிறுவர்களை வவுனியா நகரத்தில் அமைந்துள்ள அரசாங்க பாடசாலைகளில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, பாலர் பாடசாலைகளில் கல்வி கற்கக்கூடிய 06 பெண் பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டுக்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வட மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் நிமால் லெவ்கேவின் பாதுகாப்பில் ஜனாதிபதியின் பாரியார் சிரந்தி ராஜபக்ஷவின் அறிவுரை மற்றும் மேற்பார்வையின் கீழ் வவுனியாவில் அமைந்துள்ள எட்வார்ட்ன்ஸ் சர்வதேச பாடசாலையில் அனுமதி வைபவம் இடம்பெற்றது. (ஐ-ஞ)

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •