வரு. 78 இல. 300
ஹிஜ்ரி வருடம் 1432 முஹர்ரம் பிறை 16
விகிர்தி வருடம் மார்கழி மாதம் 08ம் திகதி வியாழக்கிழமை

THURSDAY, DECEMBER,23, 2010

4 வது டெஸ்டில் அன்டர்ஸன் சந்தேகம்

4 வது டெஸ்டில் அன்டர்ஸன் சந்தேகம்

இடுப்பில் காயம் ஏற்பட்டுள்ள இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் அன்டர்சன் 26 ஆம் திகதி மெல்போர்னில் ஆரம்பமாகும். 4 வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது.

பேர்த் டெஸ்ட் போட்டிக்குப் பின்னர் அவரது தசையில் பிடிப்பு ஏற்பட்டுள்ளதாக இங்கிலாந்து துடுப்பாட்ட ஆலோசகர் அன்டி பிளவர் தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் போட்டி 1-1 என்று சமநிலை எய்தியுள்ள நிலையில், அன்டர்சனின் காயம் அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக ஸ்டூவர்ட் பிரோட் காயம் காரணமாக ஏற்கனவே ஆஷஸ் தொடரிலிருந்து விலகியுள்ள நிலையிலும், பேர்த் டெஸ்டிட்கும் பின்னர் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவ் ஃபின் அதிகக் களைப்படைந்ததாலும் இங்கிலாந்து அணிக்கு இது ஒரு பெரிய சோதனையாக அமைந்துள்ளது.

இருப்பினும் அன்டர்சன் குறித்து முடிவு எதுவும் ஏற்படவில்லை. இன்னும் சில நாட்கள் ஓய்வு இருப்பதால் அவர் விளையாடுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன என்று பிளவர் தெரிவித்துள்ளார்.

டிம் பிரெஸ்னன், அஜ்மல் ஷாஜாத் ஆகியோர் பின்னணியில் உள்ளனர். இருப்பினும் அன்டர்சனின் அச்சுறுத்தல் இவர்களிடம் இருக்குமா என்பது சந்தேகம்.


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


.
 
» »
» »
» »
» »
» »
» »