வரு. 78 இல. 300
ஹிஜ்ரி வருடம் 1432 முஹர்ரம் பிறை 16
விகிர்தி வருடம் மார்கழி மாதம் 08ம் திகதி வியாழக்கிழமை

THURSDAY, DECEMBER,23, 2010

கார் விபத்தில் காயமின்றி தப்பினார் கலிஸ்

கார் விபத்தில் காயமின்றி தப்பினார் கலிஸ்

கேப்டவுனில் நடந்த கார் விபத்தில் தென்னாபிரிக்க வீரர் ஜக் கலிஸ் காயமின்றி தப்பினார்.

தென்னாபிரிக்க அணியின் சகலதுறை வீரர் கலிஸ் (35) இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இரட்டை சதம் அடித்து ஆட்டநாயகன் விருது வென்றார். கடந்த திங்கட்கிழமை நள்ளிரவில் தனது காரில் கலிஸ் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். காரை இவர் தான் ஓட்டிச் சென்றுள்ளார்.

அப்போது வெயின்பர்க்கில் உள்ள வீட்டின் கேட் மீது பலமாக கார் மோதியது. இதில் கார் பலத்த சேதமடைந்தது. இதனால் காரை அங்கிருந்து இழுத்துச் சென்றனர். பின் கலிசின் தோழி ஷமோனே ஜர்டிம் வந்து கலிசை வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

இது குறித்து அணியின் முகாமையாளர் முகம்மது மூசாஜீ கூறுகையில், “இது லேசான விபத்து தான் இதனால் காரின் முன்பகுதியில் சேதம் ஏற்பட்டுள்ளது. கலிசிற்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை. அவர் நலமாக உள்ளார். இந்த சம்பவத்தால் கலிசின் நற்பெயருக்கு எந்த களங்கமும் ஏற்படவில்லை. இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் காட்டாயம் பங்கேற்பார்” என்றார்.

கலிசின் முகவர் டேவிட் ரண்டில் கூறுகையில், “விபத்து ஏற்பட்டது உண்மை தான். ஆனால் கலிஸ் காரை வேகமாக ஓட்டிச் செல்லவில்லை. மெதுவாகத்தான் சென்றார்” என்றார்.


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


.
 
» »
» »
» »
» »
» »
» »