வரு. 78 இல. 300
ஹிஜ்ரி வருடம் 1432 முஹர்ரம் பிறை 16
விகிர்தி வருடம் மார்கழி மாதம் 08ம் திகதி வியாழக்கிழமை

THURSDAY, DECEMBER,23, 2010

பாக். தொடருக்கான நியூஸி. அணி அறிவிப்பு

பாக். தொடருக்கான நியூஸி. அணி அறிவிப்பு

பாகிஸ்தானுடனான இருபது – 20 மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான நியூஸிலாந்து அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நியூஸிலாந்து சுற்றுப் பயணம் மேற் கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 இருபது – 20, 2 டெஸ்ட் மற்றும் 6 ஒரு நாள் போட்டிகளைக் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இதற்கான நியூஸிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பாகிஸ்தானுடனான இருபது – 20 தொடருக்கு ரோஸ் டெய்லர் தலைமையிலான நியூஸிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டீன் பிரவுன்ஸின், லுக் வுட் கொக், அடம் மைன் ஆகிய புதுமுக வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் காயத்தினால் அவதிப்பட்டு வரும் பிரென்டன் மெக்கலம் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். எனினும் மாற்று வீரராக பீட்டர் மெக்லாஷ¤ இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நியூஸிலாந்து பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இருபது – 20 தொடர் வரும் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகவுள்ளது-

இதேவேளை, பாகிஸ்தானுடனான டெஸ்ட் தொடருக்கு டானியல் விட்டோரி தலைமையிலான நியூஸிலாந்து அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரில் சோபிக்கத் தவறிய விக்கெட் காப்பாளர் திரேட் ஹொப்கின்ஸனுக்கு பதிலாக புதுமுக வீரர் ரீஸ் யங் இணைக்கப்பட்டுள்ளார். 13 பேர் கொண்ட நியூஸிலாந்து டெஸ்ட் அணியில் சுழற் பந்து வீச்சாளர் ஜிதன் படேல், ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பி. ஜே. வொட்லின் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை.

நியூஸிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் ஜனவரி 7 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


.
 
» »
» »
» »
» »
» »
» »