புத் 67 இல. 37

மன்மத வருடம் ஆவணி மாதம் 20 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்கஃதா பிறை 21

SUNDAY SEPTEMBER 06 2015

 

 

இந்திய .சினிமாவில் கால்பதிக்கும் 16வயது இலங்கை கவிஞன்

இந்திய சினிமாவில் கால்பதிக்கும் 16வயது இலங்கை கவிஞன்

இந்திய சினிமாவில் முதன் முதலாக ஈழத்து இரத்தினம் என்பவர் 53வருடங்களிற்கு முதல் தென்னிந்திய சினிமாவில் பாடல் எழுதினார். அதன்பின்னர் நீண்ட இடைவெளிகளிற்கு பிறகு கவிஞர் பொத்துவில் அஸ்மின் 2011ம் ஆண்டு விஜய்ஆண்டனியின் நடிப்பில் வெளிவந்த

நடிப்பில் வெளிவந்த "நான்"திரைப்படம் மூலம் தென்னிந்திய சினிமாவில் பாடலாசிரியராக அறிமுகமானார். அதன் பின்னர் 4வருடங்களிற்கு பிறகு குலராஜ் தென்னிந்திய சினிமாவில் "வெல்"திரைப்படம் மூலம் பாடலாசிரியராக அறிமுகமாகின்றார். "வெல்"திரைப்படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.கே.றாஜறாஜ இவர் 200 மேற்பட்ட மொழிமாற்றப்படங்களை செய்துள்ளார்.அதுமட்டுமின்றி "இளவட்டம்"என்ற திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்."வெல்"படத்தில் இசையமைப்பாளர்"சாந்தன்" இவர் இவ் திரைப்படமூலம் அறிமுகமாகின்றார். குலராஜ் யாழ் மாவட்டத்தில் வலிகாமம் மேற்கு பிரதேச சபைக்கு உற்பட்ட பண்ணாகம் என்ற கிராமத்தில் மகேந்திரன் சுதாஜpனி தம்பதிகளுக்கு பிறந்தவர்.இவருடன் நான்கு சகோதரிகள் உடன் பிறந்தவரகள்.இவர் தனது கல்வியை யாழ்.பண்ணாகம் மெய்கண்டான் மா.வி கற்றார்.இவர் தனது 11வயதில் கவிதை எழுத ஆரம்பித்து 13வது வயதில் (2011ம் ஆண்டு"வைரம்"எனும்

கவிதை நூலினை வெளியிட்டார்.இவ் நூலுக்காக வலிகாமம் மேற்கு பிரதேச சபை "கவி அரசு"என்ற பட்டத்தையும் வழங்கி கௌரவித்தது.தற்போது குலராஜ் தனது குடும்பத்துடன் பிராஸ் நாட்டில் வசித்து வருகின்றார்.

இந்திய சினிமாவில் கால்பதிக்கும் மூன்றாவது இலங்கை கவிஞன் என்ற பெருமையை தவிற இந்திய சினிமாவில் 16வயதில் பாடலாசிரியராகும் முதல் இளம் கவிஞன் என்ற பெருமைக்கும் உரியவர்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.