புத் 67 இல. 37

மன்மத வருடம் ஆவணி மாதம் 20 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்கஃதா பிறை 21

SUNDAY SEPTEMBER 06 2015

 

 

கவர்ச்சி நமீதா!

தமிழ் திரை உலகில் மீண்டும் களம் இறங்கும்

கவர்ச்சி நமீதா!

தமிழ் திரைஉலகில் கவர்ச்சி புயலாக வலம் வந்தவர் நமீதா. இவரது படங்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் இருந்தது. ஆனால் கடந்த சில வருடங்களாக தமிழ் படங்களில் நமீதா நடிக்கவில்லை. இதற்கிடையே கன்னட படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். தமிழ் படங்களில் பொருத்தமான வேடம் கிடைத்தால் நடிப்பேன் என்று அறிவித்து இருந்தார்.

தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதை ஒன்று அவரிடம் சொல்லப்பட்டது. இதையடுத்து நமீதா அந்த படத்தில் தமிழில் நடிக்க ஒப்புக்கொண்டு இருக்கிறார். இதற்கான ஒப்பந்தம் சமீபத்தில் முடிவடைந்துள்ளது. நமீதாவின் தமிழ்ப்பட அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கோடம்பாக்கம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.