புத் 64 இல.

நந்தன வருடம் சித்திரை மாதம் 03ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ஜ.அவ்வல் பிறை 23

SUNDAY APRIL  15  2012

 
அரசாங்கம் மீது பழி சுமத்துவது TNAயின் வழமையான ஒன்று!

அரசாங்கம் மீது பழி சுமத்துவது TNAயின் வழமையான ஒன்று!

தமிழ் மக்களுக்கும் இன்று இது நன்கு தெரியும்

அரசாங்கத்தின் மீது பழி சுமத்துவது என்பது தமிழ்க் கூட்டமைப்பின் வழமையான ஒரு விடயம். இது இன்று தமிழ் மக்களுக்கும் நன்கு தெரியும். செய்திக்கு ஒன்றுமில்லாத பட்சத்தில் ஊடகங்கள் அரசுடனான பேச்சு எப்படி என்று கேட்க, அரசை வசைபாடி அறிக்கை விடுவது கூட்டமைப்பினரது வழமையானதொரு விடயம் என்று அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்தார். அதனால் இது பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.

தமிழ் மக்களுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுப்பதில் அவர்களுக்கு உண்மையாகவே அக்கறை இருப்பின் அது குறித்து அரச தரப்புடனேயே பேச வேண்டும். அதைவிடுத்து ஊடகங்களிடம் வாய்க்கு வந்தபடி அறிக்கை விட்டு வருவது முறையற்ற செயல். தமிழ்க் கூட்டமைப்பு இப்போது வங்குரோத்து அரசியல் நடத்தி வருகின்றது. அதனால்தான் யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து மே தினத்தைக் கொண்டாட தீர்மானித்துள்ளது.

பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக அரசாங்கம் எப்போதுமே தயாராகவே உள்ளது. பொய்யான அறிக்கைகளை விடுவதை விடுத்து பேச்சுக்கான திகதி குறித்து அரச தரப்பு பிரதிநிதிகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும். அதைவிடுத்து ஊடகங்களிடம் திகதியைப் பற்றிக் கேட்பது பொருத்தமற்றது எனவும் அந்த அமைச்சர் தெரிவித்தார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.