புத் 64 இல.

நந்தன வருடம் சித்திரை மாதம் 03ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ஜ.அவ்வல் பிறை 23

SUNDAY APRIL  15  2012

இவ்வார பலன்

கிரகம் நிற்கும் ராசி நிலை

குரு : மேடம் (நட்பு)
கேது : இடபம் (நீசம்)
ராகு : விருச்சிகம் (உச்சம்)
சூரியன் : மேடம் (உச்சம்)
சனி : கன்னி (வக்கிரம் - நட்பு)

புதன் : மீனம் (நீசம்)
சுக்கிரன் : இடபம் (ஆட்சி)
செவ்வாய் : சிங்கம் (பகை)
சந்திரன் : மகரம், கும்பம், மீனம், மேடம்

 

15.04.2012 முதல் 21.04.2012 வரை

பிரம்மஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா

மேடம்

அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்

மேட ராசிக்காரர்களே நந்தன வருடத்தில் முக்கியமான கிரக மாற்றங்களில் குருமாற்றம் குறிப்பிடத்தக்கது. வைகாசி மாதம் 5ம் திகதி அதாது 15.05.2012 வெள்ளிக்கிழமை முதல் வருடம் முழுவதும் இடப ராசியில் நட்பு பெற்ற குருபகவான் சஞ்சாரம் செய்வது மிகவும் சிறப்பாகும். அலைச்சலும் ஓய்வு இல்லாமலும் இருந்த உங்களுக்கு 2ம் இடத்து குருபகவானாக வருவதால் செல்வமும் செழிப்பான வாழ்க்கையும் கிடைக்கும்.


இடபம்

கார்த்திகை, 2,3,4ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1,2ம் பாதம்

இடப ராசிகாரர்களே நந்தன வருடத்தில் முக்கியமான கிரக மாற்றங்களில் குருமாற்றம் குறிப்பிடத்தக்கது. வைகாசி மாதம் 5ம் திகதி அதாவது 15.05.2012 வெள்ளிக்கிழமை முதல் வருடம் முழுவதும் இடபராசியில் நட்பு பெற்ற குருபகவான் சஞ்சாரம் செய்வது மிகவும் சிறப்பல்ல. உங்கள் ராசியில் ஜென் மகுருவாக இருப்பது நிலைமாற்றத்தையும் வீணான கலகத் தையும் ஒருவித மந்த நிலையையும் உங்களுக்கு குருபாகவானால் ஏற்படலாம்.


மிதுனம்

மிருகசீரிடம் 3,4ம் பாதம் திருவாதிரை, புனர்பூசம் 1,2,3ம் பாதம்

மிதுனராசிக்காரர்களே நந்தன வருடத்தில் முக்கியமான கிரக மாற்றங்களில் குருமாற்றம் குறிப்பிடத்தக்கது. வைகாசி மாதம் 5ம் திகதி அதாவது 15.05.2012 வெள்ளிக்கிழமை முதல் வருடம் முழுவதும் இடபராசியில் நட்பு பெற்ற குருபகவான் 12ல் சஞ்சாரம் செய்வது பல மாற்றங்கள் ஏற்படலாம். இடமாற்றத்தை தரலாம். அடி க்கடி வெளிநாட்டு பிரயாணங்கள் கைகூடி வரலாம். சுபகாரியங்க ளுக்கான செலவுகளும் கூடும். மனதில் யோசனையும் ஏற்படும்.


கடகம்

புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயிலியம்

கடக ராசிக்காரர்களே நந்தன வருடத்தில் முக்கியமான கிரக மாற்றங்களில் குருமாற்றம் குறிப்பிடத்தக்கது. வைகாசி மாதம் 5ம் திகதி அதாவது 15.05.2012 வெள்ளிக்கிழமை முதல் வருடம் முழுவதும் இடபராசியில் நட்பு பெற்ற குருபகவான் சஞ்சாரம் செய்வது மிகவும் சிறப்பாகும். அலைச்சலும் ஓய்வு இல்லாமலும் இருந்த உங்களுக்கு 11ம் இடத்து குருபகவானாக வருவதால் செல்வ மும் செழிப்பான வாழ்க்கையும் கிடைக்கும். நினைத்தது கைகூடி வரும்.


சிங்கம்

மகம், பூரம், உத்தரம் 1ம் பாதம்

சிங்க ராசிக்காரர்களே நந்தன வருடத்தில் முக்கியமான கிரக மாற்றங்களில் குருமாற்றம் குறிப்பிடத்தக்கது. வைகாசி மாதம் 5ம் திகதி அதாவது 15.05.2012 வெள்ளிக்கிழமை முதல் வருடம் முழுவதும் இடப ராசியில் நட்பு பெற்ற குருபகவான் சஞ்சாரம் செய்வது சிறப்பல்ல 10ம் இடத்து வியாழன் பதியைவிட்டு கிளப்பும் என்பது சோதிட அனுபவங்களின் முடிவு பதிவு அல்லது இடம் மாற்றம் ஏற்படலாம்.


கன்னி

உத்தரம் 2ம்,3ம்,4ம் பாதம், அத்தம், சித்திரை 1,2ம் பாதம்

கன்னி ராசிக்காரர்களே நந்தன வருடத்தில் முக்கியமான கிரக மாற்றங்களில் குருமாற்றம் குறிப்பிடத்தக்கது. வைகாசி மாதம் 5ம் திகதி அதாவது 15.05.2012 வெள்ளிக்கிழமை முதல் வருடம் முழுவதும் இடப ராசியில் நட்பு பெற்ற குருபகவான் சஞ் சாரம் செய்வது மிகவும் சிறப்பாகும். அலைச்சலும் ஓய்வு இல்லாமலும் இருந்த உங்களுக்கு 9ம் இடத்து குருபகவானாக வருவதால் செல்வமும் செழிப்பான வாழ்க்கையும் கிடைக்கும். பரீட்சைகளிலும் வழக்குகளிலும் வெற்றி கிடைக்கும்.


துலாம்

சித்திரை 3,4ம் பாதம் சுவாதி, விசாகம் 1,2,3ம் பாதம்

துலாம் ராசிக்காரர்களே நந்தன வருடத்தில் முக்கியமான கிரக மாற்றங்களில் குருமாற்றம் குறிப்பிடத்தக்கது. வைகாசி மாதம் 5ம் திகதி அதாவது 15.05.2012 வெள்ளிக்கிழமை முதல் வருடம் முழுவதும் இடப ராசியில் நட்பு பெற்ற குருபகவான் சஞ்சாரம் செய்வது மிகவும் சிறப்பல்ல. அட்டமத்து வியா ழனாக குருபகவான் சஞ்சரிப்பது பல இடைஞ்சல்களுக்கும் இடையூறுகளுக்கும் முகம் கொடுக்க வேண்டி வரும். வியாழன் தோறும் தட்சினாமூர்த்தி வழிபாடு செய்யுங்கள்.


விருச்சிகம்

விசாகம் 4ம் பாதம், அனு'ம், கேட்டை

விருச்சக ராசிக்காரர்களே நந்தன வருடத்தில் முக்கியமான கிரக மாற்றங்களில் குருமாற்றம் குறிப்பிடத்தக்கது. வைகாசி மாதம் 5ம் திகதி அதாவது 15.05.2012 வெள்ளிக்கிழமை வருடம் முழுவதும் இடப ராசியில் நட்பு பெற்ற குருபகவான் சஞ்சாரம் செய்வது மிகவும் சிறப்பாகும். அலைச்சலும் ஓய்வு இல்லாமலும் இருந்த உங்களுக்கு 7ம் இடத்தில் குரு வருவ தால் செல்வமும் செழிப்பான வாழ்க்கையும் கிடைக்கும்.


தனுசு

மூலம், பூராடம், உத்தராடம் 1ம் பாதம்

தனுசு ராசிக்காரர்களே நந்தன வருடத்தில் முக்கியமான கிரக மாற்றங்களில் குருமாற்றம் குறிப்பிடத்தக்கது. வைகாசி மாதம் 5ம் திகதி அதாவது 15.05.2012 வெள்ளிக்கிழமை வருடம் முழுவதும் இடப ராசியில் நட்பு பெற்ற குருபகவான் சஞ்சாரம் செய்வது சிறப்பல்ல. பொன்னையும் பொருளையும் அள்ளித்தந்த குருபகவான் 6ம் இடத்தில் அமர்வது உடல் நலத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.


மகரம்

உத்தராடம் 2,3,4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2ம் பாதம்

மகரம் ராசிக்காரர்களே நந்தன வருடத்தில் முக்கியமான கிரக மாற்றங்களில் குருமாற்றம் குறிப்பிடத்தக்கது. வைகாசி மாதம் 5ம் திகதி அதாவது 15.05.2012 வெள்ளிக்கிழமை முதல் வருடம் முழுவதும் இடப ராசியில் நட்பு பெற்ற குருபகவான் சஞ்சாரம் செய்வது மிகவும் சிறப்பாகும். அலைச்சலும் ஓய்வு இல்லாமலும் இருந்த உங்களுக்கு 5ம் இடத்து குருபகவானாக வருவதால் செல்வமும் செழிப்பான வாழ்க்கையும் கிடைக்கும்.


கும்பம்

அவிட்டம் 3,4ம் பாதம், சதயம், பூரட்டாதி, 1,2,3ம் பாதம்

கும்ப ராசிக்காரர்களே நந்தன வருடத்தில் முக்கியமான கிரக மாற்றங்களில் குருமாற்றம் குறிப்பிடத்தக்கது. வைகாசி மாதம் 5ம் திகதி அதாவது 15.05.2012 வெள்ளிக்கிழமை முதல் வருடம் முழுவதும் இடப ராசியில் நட்பு பெற்ற குருபகவான் சஞ்சாரம் செய்வது மிகவும் சிறப்பாகும். அலைச்சலும் ஓய்வு இல்லாமலும் இருந்த உங்களுக்கு 4ம் இடத்து குருபாகவானாக வருவதால் திடீர் அதிர்ஷ்டத்தை நீங்கள் எதிர்நோக்கலாம்.
 


மீனம்

பூரட்டாதி, 4ம் பாதம், உத்தரட்டாதி, ரேவதி

மீன ராசிக்காரர்களே நந்தன வருடத்தில் முக்கியமான கிரக மாற்றங்களில் குருமாற்றம் குறிப்பிடத்தக்கது. வைகாசி மாதம் 5ம் திகதி அதாவது 15.05.2012 வெள்ளிக்கிழமை முதல் வருடம் முழுவதும் இடபராசியில் நட்பு பெற்ற குருபகவான் சஞ்சாரம் செய்வது மிகவும் சிறப்பல்ல. சுகத்தை அனுபவித்த உங்களுக்கு மூன்றாம் இடத்து குருபகவான் பதவி மாற்றத்தை ஏற்படுத்தலாம். பல வில்லங்கங்களுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.