புத் 64 இல. 12

கர வருடம் பங்குனி மாதம் 05ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 25

SUNDAY MARCH 18  2012

 
நாட்டுக்கெதிரான சவால்களை கட்சி பேதங்களை மறந்து செயல்பட்டால் மாத்திரமே தோல்வியடையச் செய்யலாம்

நாட்டுக்கெதிரான சவால்களை கட்சி பேதங்களை மறந்து செயல்பட்டால் மாத்திரமே தோல்வியடையச் செய்யலாம்

- லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன

பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர்

கேள்வி: இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பாக சர்வதேச மட்டத்தில் ஒரு சூடு பிடித்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இதுபற்றி உங்களது விமர்சனம் என்ன?

பதில்: இலங்கையானது மனித உரிமைகள் தொடர்பாக, மனித உரிமைகளை பாதுகாப்பது தொடர்பாகவும் பெரியதோர் வரலாறும் அதனோடு கூடிய போதுமானளவு அனுபவங்களையும் கொண்டுள்ளது- அதேபோல் இலங்கைக்கு ஜனநாயகம் தொடர்பாகவும் நீண்ட கால வரலாறு ஒன்றுண்டு. அதனால் எவருக்கும் மனித உரிமைகள் தொடர்பாக தனியானதொரு விளக்கம் அல்லது வரைவிலக்கணமோ தேவைப்படாது.

மனித உரிமைகளின் பெயர்சொல்லி சில நாடுகள் தம் பக்கம் இழுத்துக்கொள்ள பார்க்கின்றன. தமது நிகழ்ச்சிகளின் பால் வளைத்துக்கொள்ள முடியாத நாடுகளை நிர்வகிக்க மனித உரிமைகள் மீறல் என்ற குற்றச்சாட்டை சர்வதேச ரீதியில் இந்நாட்டுக்கு சுமத்துகின்றது. இந்த நிகழ்ச்சிப் பத்திரங்களினால் தான் இப்போது சர்வதேச ரீதியில் சில சக்திகள் இந்நாட்டுக்கெதிராக மிகவும் பிழையான முறையில் தலையிட முயற்சியெடுப்பதற்குக் காரணமாகும். எமது நாடு யுத்தத்தின் பின் மீண்டும் எழுந்திருக்க முயல்கின்றது. அது மட்டுமல்ல இனக் குழுக்களுக்கிடையே தகர்க்கப்பட்டிருந்த ஒற்றுமை, சகவாழ்வு மீண்டும் கட்டியெழுப்ப ப்பட்டுக்கொண்டிருக்கின்றது. ஏற்பட்ட காயங்கள் மாறிக் கொண்டிருக்கின்றன. எனவே அதற்கு காலம் தேவை. அவ்வாறில்லாமல் ஜெனீவா மாநாட்டுக்கு பல பிரேரணைகளை முன்வைக்க முயற்சியெடுப்பது நல்லதோர் விடயமாக கூற முடியாது. எமது நாட்டில் மனித உரிமைகளைப் பற்றி பேசும் பலசாலிகள் மனித உரிமைகள் ஈராக்கில், ஆப்கானிஸ்தானில், லிபியாவில் பச்சை பச்சையாகவே மீறப்பட்டது பற்றி ஒருவரும் பேசவில்லை.

கேள்வி: இலங்கையில் மக்கள் விருப்பின் பேரில் அமைக்கப்பட்ட அரசாங்கத்தை சதிகளினால் தகர்த்து விட முயற்சியெடுப்பதாக ஒரு குற்றச்சாட்டு இருக்கின்றது. அதன் உண்மையான நிலைமையை விளக்க முடியுமா?

பதில்: மக்கள் விருப்பின் பேரில் ஓர் அரசை மக்கள் விரும்பினால் மாத்திரமே மாற்ற முடியும். அவ்வாறன்றி ஒவ்வொருவரின் விருப்பு அல்லது வெளிநாட்டு சக்திகளின் தேவைகளுக்கு ஏற்ப அல்ல. இந்நாட்டின் அரசாங்கம் மாற்றமடைய இந்நாட்டில் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகின்றது. நீங்கள் இருந்தது போதும். இப்போது போகலாம் என்று மக்கள் கூறுவார்களானால் ஒரு நாள் கூட நாம் பலாத்காரமாக இருக்க மாட்டோம். ஆனால் சுயநலவாதிகளின் தேவைக்கேற்ப அரசாங்கத்தை மாற்ற நாம் சந்தர்ப்பத்தைப் பெற்றுக்கொடுக்க மாட்டோம். ஒரு நாடு அல்லது அமைப்பு மற்றுமொரு நாட்டில் செல்வாக்கு செலுத்துவார்களானால், அது முழுமையாகவே ஒரு பிழையான செயல் என்றே கணிக்க வேண்டியுள்ளது.

கேள்வி: நீங்கள் நினைக்கிற மாதிரி இந்த நாட்டில் மனித உரிமைகள் மீறப்படுவதில்லை என்று நீங்கள் கூறுகின்aர்களா?

பதில்: 30 வருடங்களாக நடந்த யுத்தம் முடிவடைந்ததன் பின் மீண்டும் பழைய நிலைமைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றது. மக்களுக்கிடையே ஒற்றுமை, சகவாழ்வு ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது.

அதனால் பலவித குற்றச்சாட்டுக்களைக் கூறி இத்தொடர்புகளை இல்லாதொழித்து நாட்டை அராஜக நிலைமைக்குக் கொண்டு வரும் சதிக்காரர்களை தெரிந்துகொள்ள வேண்டும். ஈரான், சிரியா, லிபியா போன்ற நாடுகளில் காணப்படும் விடயங்கள் எமது நாட்டுக்கு சரிவரமாட்டாது.

அப்படியான சதிகளுக்கு இந்நாட்டு மக்கள் அகப்படமாட்டார்கள்.

கேள்வி: இனங்களுக்கிடையே ஒற்றுமை, மன அமைதியை ஏற்படுத்த அரசாங்கத்துக்கு எவ்வித திட்டமும் இல்லையென்று எதிர்க்கட்சியின் சில தரப்பினர் குற்றம் சுமத்துகின்றனர். இது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: அரசாங்கத்துக்கு இன, மத பேதங்களில்லை. தேவைப்பட்டிருப்பதெல்லாம் இந்நாட்டை வளர்ச்சியடையச் செய்வதும், ஒற்றுமையையும் சகவாழ்வையும் ஏற்படுத்துவது, மட்டும் தான். நாம் அதற்காக தேவையான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம். நல்லிணக்க மற்றும் மீள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவை ஏற்படுத்தியதும் அதன் பரிந்துரைகள் பற்றி கவனமெடுத்திருப்பதும் இதனால் தான்.

அதனால் எமக்கு சர்வதேச சவால்கள், பிரச்சினைகள் தேவைப்படாது. எம்மால் முடியும் இந்நாட்டு பிரச்சினைகளை, எம்மாலேயே தீர்த்துக்கொள்ள. அதனால் சர்வதேச ரீதியான செல்வாக்குகள் வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் தான் இருக்கின்றோம்.

மேலைத்தேய நாடுகள் இலங்கை போன்ற நாடுகள் அமைதியான முறையில் வளர்ச்சியடைந்து வருவதை விரும்புவதில்லை.

அவர்களுக்குத் தேவையாக இருப்பது இலங்கை போன்ற நாடுகளை அவர்களுக்குக் கீழ் அவர்களின் கட்டமைப்புகளுக்கிணங்க நடந்து கொள்ளக் கூடிய தலைவர்களை உருவாக்குவதே.

கேள்வி: மத்திய கிழக்கு உட்பட ஆசிய பிராந்தியத்தில் அரசுக்கெதிராக மக்கள் போராட்டமொன்று ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்தின் ஒரு சில தரப்பினர் சொல்கிறார்கள் இலங்கையிலும் அத்தகைய ஒரு சதித்திட்ட நிலைமை ஏற்பட்டிருப்பதாகக் கூறுகின்றனர். இது பற்றி உங்களது கருத்து என்ன?

பதில்: சில சதித்திட்ட சக்திகள் இந்நாட்டிலும் அத்தகையதொரு நிலைமையை உருவாக்க முயற்சி செய்கின்றனர்.

ஆனால் இலங்கையில் அத்தகையதொரு நிலைமை ஏற்பட எந்தவிதமான ஒரு காரணமும் இல்லை. மக்கள் அரசாங்கத்துடன் தான் இருக்கின்றனர். பாகுபாடுகளைக் கொண்ட, திறமாக ஒழுங்கமைத்துக்கொள்ள முடியாத ஒரு எதிர்க்கட்சியோடு மக்கள் மாத்திரமல்ல அவர்களின் அங்கத்தவர்கள் கூட ஒன்றிணைய மாட்டார்கள். அத்தகையதொரு எதிர்க்கட்சிக்கு ஒரு மாற்றத்தைக் கொண்டு வர முடியாது. அடுத்தது ஈராக்கிலும் லிபியாவிலும் உள்ள திருவிளையாடல்களை இங்கு செய்ய முடியாது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.