ஹிஜ்ரி வருடம் 1436 ரபீஉல் ஆகிர் பிறை 24
ஜய வருடம் மாசி மாதம் 02ம் நாள் சனிக்கிழமை

SATURDAY, FEBRUARY 14 2015
வரு. 83  இல. 39
 

உலக கோப்பை கிரிக்கெட்டில் ஹெட்ரிக் சாதனையாளர்கள்

உலக கோப்பை கிரிக்கெட்டில் ஹெட்ரிக் சாதனையாளர்கள்

பொதுவாக அவுஸ்திரேலியா, நியு+சிலாந்து ஆடுகளங்கள் வேகப் பந்து வீச்சுக்கு உகந்தவை என்பதால் இந்த உலக கோப்பை கிரிக்கெட்டில் துடுப்பாட்டவீரர்களுக்கு நிகராக பந்து வீச்சாளர் களும் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று எதிர்பார்ப்பு நிலவுகி றது. அதற்கு முன்பாக உலக கோப்பையில் பந்து வீச்சாளர்கள் செய்த சில சாதனை விபரங்களை இங்கு பார்க்கலாம்.

உலக கோப்பையில் இதுவரை 7ஹெட்ரிக் (தொடர்ச்சியாக 3 விக்கெட் வீழ்த்துவது) நிகழ்த்தப்பட்டுள்ளன. இந்தியாவின் சேத் தன் 'ர்மா (நியு+சிலாந்துக்கு எதிராக, 1987), பாகிஸ்தானின் சக்லைன் முஸ்டாக் (சிம்பாப்வேக்கு எதிராக, 1999), இலங்கை யின் சமிந்த வாஸ் (பங்களாதே'_க்கு எதிராக, 2003), அவுஸ்தி ரேலியாவின் பிரெட்லீ (கென்யாவுக்கு எதிராக, 2003), இங்கை யின் மலிங்க (தென்ஆபிரிக்காவுக்கு எதிராக, 2007), மேற்கிந் தியதீவின் கெமர் ரோச் (நெதர்லாந்துக்கு எதிராக, 2011), இலங் கையின் மலிங்க (கென்யாவுக்கு எதிராக, 2011) ஆகியோர் ஹெட்ரிக் சாதனையாளர்கள் ஆவர்.

இதில் 2007-ம் ஆண்டு உலக கோப்பையில் தென்ஆபிரிக்கா வுக்கு எதிராக மலிங்க தொடர்ந்து 4 பந்துகளில் விக்கெட்டு களை சாய்த்தார். உலக கோப்பை மட்டுமின்றி ஒரு நாள் போட்டி வரலாற்றில் தொடர்ந்து 4 பந்துகளில் 4 விக்கெட் வீழ்த்திய ஒரே வீரர் இவர் தான்.

இலங்கை முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சமிந்த வாசுக்கும் ஒரு சிறப்பு உண்டு. அவர் 2003-ம் ஆண்டு உலக கோப்பையில் பங்களாதே'_க்கு எதிராக ஆட்டம் தொடங்கிய முதல் 3 பந்துகளிலும் விக்கெட்டுகளை கபளீகரம் செய்திருந்தார். எந்த வடிவிலான கிரிக்கெட்டிலும் சரி ஆட்டம் தொடங்கிய முதல் 3 பந்துகளில் விக்கெட் எடுத்த ஒரே வீரர் இவர் தான்.

உலக கோப்பை போட்டியில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றி யவர் அவுஸ்திரேலியாவின் மெக்ராத். அவர் 71 விக்கெட்டுகளு டன் (39 ஆட்டம்) முதலிடத்தில் இருக்கிறார். ஒரு உலக கோப் பையில் அதிக விக்கெட் (2007-ம் ஆண்டு உலக கோப்பையில் 26 விக்கெட்), இன்னிங்சில் சிறந்த பந்து வீச்சு (2003-ம் ஆண்டு நமிபியாவுக்கு எதிராக 7-15) ஆகிய பெருமையும் மெக்ராத் வசமே இருக்கிறது. 1983-ம் ஆண்டு உலக கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் நியு+சிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்ட்டின் சினெடன் 12 ஓவர்களில் 105 ஓட்டங்;களை வாரி வழங்கியதே இந்த நாள் வரை மோச மான பந்து வீச்சாக உள்ளது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி