ஹிஜ்ரி வருடம் 1434 துல்ஹிஜ்ஜஹ் மாதம் பிறை 02
விஜய வருடம் புரட்டாசி மாதம் 22ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, OCTOMBER , 08, 2013
வரு. 81 இல. 238
 

சேதனப் பசளை உற்பத்தியாளர் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்க்க விவசாய அமைச்சு நடவடிக்கை

சேதனப் பசளை உற்பத்தியாளர் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்க்க விவசாய அமைச்சு நடவடிக்கை

நாட்டின் சகல பகுதிகளிலும் தேசனப் பசளை உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்க விவசாய அபிவிருத்தித்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

நாட்டில் பரவலாக சேதனப் பசளை உற்பத்தியில் ஈடுபட்டு தயாரிக்கப்படும் பசளையின் தரம் பற்றிய ஆய்வினையும், பரிசோதனையையும் இலவசமாக வழங்குவதற்கு விவசாய அமைச்சின் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

சேதனப் பசளை உற்பத்தியாளர்களுக்கு இலவசமாக பொதிகள் தயாரிப்பதற்காக உறைகள் வழங்கப்படவுள்ளன. அத்துடன் எப்பாவெல பொஸ்பேட் நிறுவன உற்பத்தியான “ரொக்பொஸ்பேட்” 15 கிலோ கிராம் மற்றும் தேவையான பொலித்தீன் வகைகளும் விவசாய அபிவிருத்தித்துறை அமைச்சினால் இலவசமாக வழங்கப்படவுள்ளன.

சேதன பசளை உற்பத்தியில் ஈடுபடும் தெரிவு செய்யப்பட்ட சகல விவசாயிகளுக்கும் சலுகைகள் வழங்கப்படவுள்ளதுடன், அவர்களது உற்பத்தியை சந்தைப்படுத்துவதற்காக சகல வாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொடுக்க ஆக்கபூர்வமான ஒழுங்குகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. அத்துடன் இத்திட்டம் சகல கிராமங்களுக்கும் வியாபிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி