ஹிஜ்ரி வருடம் 1434 துல்ஹிஜ்ஜஹ் மாதம் பிறை 02
விஜய வருடம் புரட்டாசி மாதம் 22ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, OCTOMBER , 08, 2013
வரு. 81 இல. 238
 

மிரிஜ்ஜவிலை, சூரியவெவயில் இரு முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்கள்

மிரிஜ்ஜவிலை, சூரியவெவயில் இரு முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்கள்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டலின் கீழ் ஹம்பாந்தோட்டை மிரிஜ்ஜவிலை மற்றும் சூரியவெவ பிரதேசங்களில் முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்கள் இரண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கென 430 ஹெக்டெயார் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதோடு, இதில் தகவல் தொழில்நுட்ப பூங்கா, விளையாட்டு கிராமம், உயர் கல்வி நிலையங்கள், சுற்றுலா ஹோட்டல்கள், வீடமைப்புத் தொகுதிகள் மற்றும் கடைத் தொகுதிகள் என்பனவும் நிர்மாணிக்கப்படவுள்ளன.

இதனூடாக கூடுதல் வருவாயுள்ள தொழில் வாய்ப்புக்கள் உருவாகவுள்ளதோடு இளைஞர், யுவதிகள் புதிய தொழில் வாய்ப்புக்களையும் பெறவுள்ளனர். இதற்கென அரசாங்கம் 2500 மில்லியன் ரூபாவினை ஒதுக்கீடு செய்துள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச துறைமுகம், மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம், மத்தல மற்றும் சர்வதேச கிரிக்கெட் மைதானம் சூரியவெவ ஆகியவற்றினை உள்ளடக்கி இவ் முதலீட்டு வலயம் உருவாக்கப் பட்டுள்ளதோடு சீனா, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இதில் முதலீடு செய்ய முன்வந்துள்ளன.

இப் பிரதேசங்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு பாதைகள், நீர், மின்சாரம், போக்குவரத்து மற்றும் தொடர்பாடல் என்பன அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி