ஹிஜ்ரி வருடம் 1434 ஷவ்வால் மாதம் பிறை 15
விஜய வருடம் ஆவணி மாதம் 07ம் திகதி வெள்ளிக்கிழமை
FRIDAY, AUGUST , 23 , 2013
வரு. 81 இல. 200
 

அஹ்லுல் பைத் மீதான நேசம் பெருமானார் மீதான அன்பின் அடையாளமே!

அஹ்லுல் பைத் மீதான நேசம் பெருமானார் மீதான அன்பின் அடையாளமே!

ஓஹ்!... அஹ்லுல் பைத்தினரே அல்லாஹ் உங்களை விட்டும் சகல அசுத்தங்களையும் நீக்கி தூய்மைப்படுத்த விரும்புகின்றான் என்னும் அல்-குர்ஆனின் வசனம் இறங்கியவேளை, நாயகமவர்கள் அலி (ரலி), பாத்திமா, ஹஸன், ஹுஸைன், ஆகியோரை அழைத்து இறைவா இவர்களே எனது அஹ்லுல் பைத்கள் இவர்களை விட்டும் சகல அசுத்தங்களையும் விட்டு அருள் புரிவாயாக எனக் கூறிப் பிரார்த்தித்தார்கள். (உம்முஸல்மா (ரலி) ஹாகிம்)

பெருமானார் (ஸல்) அவர்களின் மிக நெருங்கிய குடும்ப உறவைக் குறிக்கும், அஹ்லுல் பைத் எனப்படுபவர்கள் சமயப் பற்றினாலோ அல்லது இரத்த உறவால் ஏற்பட்டதாகவே இருக்கின்றது என கூறப்பட்டுள்ளது. (லிஸானுல் அரம் - இப்னு மன்தூர்)

இறைவன் தன் அருள் மறையில் நபியவர்களை விழித்துக் கூறும் போது நபியே கூறுவீராக எனது இனபந்துக்களை நேசிப்பதைத் தவிர வேறு எந்தக் கூலியையும் நான் உங்களிடம் எதிர்பார்க்கவில்லை. எனக் கூறுகின்றான். இவ்வசனம் ‘ஆயத் முஹப்பத்’ என்ற புகழ்பெற்ற வசனமாகும் (42 : 23)

மேற்குறித்த வசனம் இறங்கிய போது; ஸஹாபாக்கள் நாயகமே நாம் நேசங்கொள்ள கடமைப்பட்டுள்ள தங்களது குடும்பத்தினர் யாவர்? என வினவ அதற்கு பெருமானாரவர்கள் அலியும் பாத்திமாவும் அவ்விருவரின் இரு பிள்ளைகளும் ஆவர். எனப் பதிலளித்தார்கள். (துர்ருள் மன்தூர்)

புனித அருள் மறையிலும் ஹதீஸ்களிலும் அஹ்லுல் பைத்தினர் மீதான நேசம் பற்றி மிக வலியுறுத்தப்பட்டுள்ளது. அவர்கள் மீது நேசங்கொள்வதென்பது நாயகமவர்களின் குடும்ப உறவுகள் என்பதற்காக மட்டுமல்லாது. மனித குணங்களிலும் ஒழுக்கம் பண்பாட்டு விழுமியங்களிலும் பூரணத்துவமும் முழுமையும் பெற்று பரிணமிக்கப்படுபவர்கள் என்பதாக நோக்கப்பட்டுள்ளது.

பெருமானாரின் அறநெறிப் பாசறையில் பயிற்றப்பட்டு, உண்மை விசுவாசிகளால் உருவாக்கப்பட்டு, ஈமானிய முத்திரை பதிக்கப்பட்டவர்களான அஹ்றுல் பைத்தினரை நேசிப்பதானது பெருமானார் அவர்கள் மீதான அன்பிற்கான அடையாளமே.

* அல்லாஹ் உங்களுக்கு அளித்திருக்கும் அருட் கொடைகளுக்காக நீங்கள் அவனை நேசியுங்கள், அல்லாஹ் மீது, நீங்கள் கொள்ளும் நேசத்திற்காக என்னை நேசியுங்கள். என்மீது நீங்கள் கொள்ளும் அன்பின் அடையாளமாக எனது அஹ்லுல் பைத்தினரை நேசியுங்கள். (திர்மிதி, ஹாகிம்)

* ஸைத் இப்னு அர்க்கம் (ரலி) அறிவிக்கின்றார்கள் :- நாயகமவர்களின் சபையில் உட்கார்ந்திருந்தேன். அங்கு பாத்திமாக (ரலி) ஹஸனையும் ஹுஸைனையும் இரு கரங்களில் பிடித்தவர்களாக வருகை தந்து நாயகமவர்களின் அறைக்குள் நுழைந்தார்கள். நாயகமவர்கள் அந்நான்கு பேரையும் பார்த்து எவர் இவர்களை நேசிக்கின்றாரோ அவர் என்னை நேசித்தவராவார். இன்னும் எவர் இவர்களைப் பகைத்துக் கொள்கின்றாரோ அவர் என்னைப் பகைத்தவராவார். எனக் கூறினார்கள். (தாரீகு தெமஷ்க்கு)

மேலும் பெருமானாரவர்கள் அஹ்லுல் பைத் மீது நேசங்கொள்ள ஈமானின் அடிப்படையாகும் தீனின் அடிப்படை என்னையும் என் குடும்பத்தையும் நேசிப்பதாகும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு அடிப்படை இருக்கின்றது. தீனின் அடிப்படை அஹ்லுல் பைத்களான எம்மை நேசிப்பதாகும். (உஸ¤லுல் காஃபி) (துர்ருள் மன்தூர்)

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி